இந்தியாவின் பொருளாதாரம் இறந்துவிட்டது.. ரஷ்யாவோடு சேர்ந்து காலியாகட்டும்.. டிரம்ப் பகிரங்க அட்டாக்!
நியூயார்க்: இந்தியா, ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது.. ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் தங்களின் பொருளாதாரத்தை தாங்களே அழித்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவுடன் அமெரிக்கா மிகக் குறைந்த அளவிலேயே வர்த்தகம் செய்து வருகிறது. ஏனெனில், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் உலகிலேயே மிக அதிகமாக உள்ளன. அதேபோன்று, ரஷ்யாவுடனும் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் வர்த்தகம் இல்லை. ஆகவே, இப்போது இருப்பது இப்படியே இருக்கட்டும். ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மெட்வெடேவ் இன்னும் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக்கொண்டு வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். அவர் ஆபத்தான பாதையில் செல்கிறார்.. இந்தியா, ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது.. ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல்
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு இருந்தபோதிலும், அதிகப்படியான வரிகள் மற்றும் கடுமையான வர்த்தகக் கட்டுப்பாடுகள் காரணமாக இரு நாடுகளுக்குமான வர்த்தகம் குறைவாகவே உள்ளது என்று டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். மேலும் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் அவர் கூறினார்.
இந்தியாவின் ராணுவ தளவாடத் தேவைகளில் பெரும்பாலானவை ரஷ்யாவிலிருந்தே பூர்த்தி செய்யப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி வாங்கும் நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவின் போக்கை உலக நாடுகள் கண்டித்து வரும் நிலையில், ஆகஸ்ட் முதல் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இது இந்தியாவுக்கு விதிக்கப்படும் அபராதமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப் இந்தியா வரி விதிப்பு
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுடன் புதிய வர்த்தக உடன்பாடு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதித்த சில மணி நேரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியானது. பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துள்ளது மட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சில கருத்துகளையும் டிரம்ப் முன்வைத்தது இந்தியாவை மேலும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.
பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் கச்சா எண்ணெய் சம்பந்தப்பட்டதாகும். இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை கூட்டாக ஆராய்ந்து மேம்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் இது இந்தியாவுக்கு எண்ணெய் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கும் என்று டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை வெட்டி எடுத்து உலக நாடுகளுக்கு விற்க அமெரிக்கா உதவி செய்யும் என்றும், அந்த எண்ணெயை இந்தியா கூட வாங்கலாம் என்றும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வரி விதிப்பு
அமெரிக்காவும் பாகிஸ்தானும் இணைந்து புதிய எரிசக்தி நிறுவனத்தை உருவாக்கும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இது குறித்து டிரம்ப் மேலும் கூறுகையில், பாகிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் இணைந்து எண்ணெய் வளங்களை மேம்படுத்த முடியும். இந்த கூட்டு முயற்சிக்கு தலைமை தாங்க ஒரு எண்ணெய் நிறுவனம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படும். ஒருவேளை பாகிஸ்தான் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எண்ணெய் விற்கவும் வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு மோசமடைந்துள்ளதோடு, வெளியுறவுத் துறைக்கு இது ஒரு பின்னடைவாகவும் கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளார்.












Click it and Unblock the Notifications