கனவில் கூட நினைச்சு பார்க்காதீங்க! மறந்துடுங்க! உக்ரைனுக்கு பெரிய ஆப்பு வைக்கும்.. டொனால்ட் டிரம்ப்
நியூயார்க்: உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு பெரிய அதிர்ச்சி ஒன்றை அமெரிக்கா அளித்துள்ளது. நேட்டோ படையில் இணையும் திட்டத்தை, கனவை உக்ரைன் மறந்துவிடலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். அதோடு உக்ரைனுக்கு கொடுத்த பல கோடி நிதிகளை திருப்பி கொடுங்கள் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த செலவிற்கு ஈடுகட்டும் விதமாக உக்ரைனுக்கு கிடைக்கும் வருவாயில் 50 சதவிகிதப் பங்கை அமெரிக்கா கோரி உள்ளதாம். அதன்படி உக்ரைனின் இயற்கை வளங்களில் இருந்து, உற்பத்தியில் இருந்து வரும் வருவாயில் முதல் பங்கு அமெரிக்காவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா உக்ரைனிடம் தெரிவித்து உள்ளதாம்.

3 வருடங்களாக செய்த உதவிகளுக்கு பதிலாக இதை வழங்க வேண்டும் என்று உக்ரைனிடம் அமெரிக்கா கண்டிப்பாக கூறி உள்ளதாம். கிட்டத்தட்ட உக்ரைனை அமெரிக்காவின் பொருளாதார காலனியாக மாற்றும் வகையில் இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளதாம்.
அமெரிக்கா சார்பாக உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட ரிப்போர்ட் ஒன்றில் இது தொடர்பான கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின் ஜெர்மனிக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட மிக மோசமான கட்டுப்பாடுகள் உக்ரைன் மீது விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் புடின் ஆகியோர் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க இரண்டு பேரும் ஒப்புக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் இல்லாத காரணத்தால்.. ரஷ்யாவின் கையே ஓங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
உக்ரைனின் இயற்கை வளங்கள், துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வருவாயில் 50 சதவிகிதப் பங்கை அமெரிக்கா கோரி உள்ளதாம். 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா இதுவரை உக்ரைனுக்கு வழங்கி உள்ளதாம். போர் செலவுகளை சமாளிக்க, ஆயுதங்களை வழங்க 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா இதுவரை உக்ரைனுக்கு வழங்கி உள்ளது.
ரஷ்யா உக்ரைன் பேச்சுவார்த்தை:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான சந்திப்பு கடந்த வாரம் சவூதி அரேபியாவில் முடிவடைந்தது. ரஷ்யா - அமெரிக்க அதிகாரிகள் இடையே நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை உக்ரைனை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. உக்ரைன் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை.இப்படிப்பட்ட நிலையில்தான் நாங்கள் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் பணம் தனது உள்ளோம். அதை திருப்பி கொடுங்கள்.. அதில் பாதிக்கு மேல் நீங்கள் திருப்பி கொடுங்கள், என்று டிரம்ப் உக்ரைனுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் உயர்மட்ட சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இந்த போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான முதல்படி இது.. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது உள்ளது, என்று தெரிவித்து உள்ளனர்.
உக்ரைனுக்கு எதிராக பல விஷயங்கள் இதில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. உக்ரைனை கட்டுப்படுத்துவதற்கான சில விதிகளை அமெரிக்கா உக்ரைனிடம் தனியாக தெரிவித்து உள்ளதாம். அதாவது உக்ரைன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில்.. உக்ரைனிடம் அமெரிக்கா சார்பாக சில கட்டுப்பாடுகள், கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளதாம்.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications