நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொறுக்க முடியாது.. ஒபாமாவின் பழைய டீமை இறக்கிய பிடன்.. முக்கிய பதவிகள் அறிவிப்பு.. அதிர்ந்த டிரம்ப்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று இருக்கும் ஜோ பிடன் தற்போது தனது அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பொறுப்புகளுக்கு அதிகாரிகளை அறிவித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பிடன் தற்போது அதிபர் பதவியில் அமர்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். தனது ஆட்சியின் போது அமைச்சரவையில் இருக்க போகும் அதிகாரிகள் யார் என்பதற்கான ஆலோசனைகளை பிடன் மேற்கொண்டு வருகிறார்.

அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் மெல்ல மெல்ல புதிய ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் டிரம்ப் ஒதுங்கி போக தொடங்கி உள்ளார்.

அறிவிப்பு

அறிவிப்பு

இந்த நிலையில்தான் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று இருக்கும் ஜோ பிடன் தற்போது தனது அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பொறுப்புகளுக்கு அதிகாரிகளை அறிவித்து உள்ளார். அதன்படி அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக ஆண்டனி பளிங்கெனை நியமித்து உள்ளார். இவர் அமெரிக்காவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர்.

ஒபாமா

ஒபாமா

ஒபாமா அதிபராக இருந்த போது ஆண்டனி பளிங்கென் அமெரிக்காவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். அதேபோல் இவர் பிடன் துணை அதிபராக இருந்த போது அவருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்துள்ளார். ஆண்டனி பளிங்கெனுக்கு தற்போது வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி உறுதியாகி உள்ளது.

வேறு யார்

வேறு யார்

அதேபோல் அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக அலிஜான்ரோ மாயோர்காஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதல் லீத்தீனோ அமெரிக்கன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் அமெரிக்காவில் மக்கள் குடியேறுவது குறித்து சிட்டிசன்ஷிப், விசா விதிமுறைகளை வகுக்க போவது.

இயக்குனர்

இயக்குனர்

அதேபோல் அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குனர் பொறுப்பிற்கு ஆவ்ரில் ஹைனசை பிடன் நியமித்து உள்ளார். இந்த பொறுப்பை வகிக்கும் முதல் பெண் இவர்தான். இவர் சிஐஏ அமைப்பின் முன்னாள் துணை இயக்குனராக இருந்தவர். அதேபோல் லிண்டா தாமஸ் தற்போது ஐநாவின் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 அமெரிக்கா

அமெரிக்கா

ஐநா அமைப்புகளுக்கும் அமெரிக்காவிற்கு இடையே மோதல்கள் வந்துள்ள நிலையில் தற்போது லிண்டா தாமஸ் மூலம் அமெரிக்கா - ஐநா இடையிலான உறவை புதுப்பிக்க பிடன் நினைக்கிறார். இதேபோல் பிடன் துணை அதிபராக இருந்த போது பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கி வந்த ஜேக் சுல்லிவான் தற்போது உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூதர்

தூதர்

அதேபோல் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைய முக்கிய காரணமாக இருந்த ஜான் கெர்ரி அமெரிக்காவின் காலநிலை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிடன் தேர்வு செய்து இருக்கும் இவர்கள் எல்லோருமே அதிபர் ஒபாமாவிற்கு கீழ் பணியாற்றிய நபர்கள். ஒபாமாவிற்கு முக்கியமான திட்டங்களை வகுத்து கொடுத்த பல மாஸ்டர்மைண்ட்கள் இதில் உள்ளனர்.

சிறப்பு

சிறப்பு

அதிலும் இதில் சிலர் டிரம்ப்பை கடுமையாக வெளிப்படையாக எதிர்த்தவர்கள். இவர்களுக்குத்தான் தற்போது பிடன் பதவி வழங்கி உள்ளார் என்பதால் டிரம்ப் இப்போதே கலக்கத்தில் உள்ளார். அமெரிக்கா தனது பாதுகாப்பு விஷயங்களை சமரசம் செய்ய முடியாது. இனியும் பொறுக்க முடியாது. பாதுகாப்பு, வெளிநாட்டு உறவில் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிடன் இந்த அமைச்சரவை அறிவிப்பு குறித்து குறிப்பிட்டுள்ளார்.

English summary
US President elect Biden selects Obama's close aides for the Cabinet and other top posts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X