இனி தங்கத்தை கையில் பிடிக்க முடியாது.. டிரம்ப் போட்டு தாக்கிட்டாரே.. US உருவாக்கிய மெகா வாய்ப்பு
நியூயார்க்: கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அமெரிக்க அரசு முடங்கியதால், தங்கத்தின் விலை கட்டுப்பாடு இன்றி உயர்ந்து வருகிறது.
அமெரிக்க அரசாங்கம் அக்டோபர் 1 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு அதிகாரப்பூர்வமாக முடங்கியது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, செனட் அவை அங்கு தற்காலிக நிதியுதவி மசோதாவை அங்கீகரிக்கத் தவறியது. இதனால் அங்கு அரசு முடங்கி உள்ளது.

இதனால் டாலரின் மதிப்பு சரிந்தது, ஆனால் உலகளாவிய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன, மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல ஃபெடரல் அமைப்புகளை மூட அல்லது நிதி ஒதுக்கீட்டை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தீவிர இடதுசாரி ஜனநாயகவாதிகள் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தனர். அதனால்தான் டாலர் மதிப்பு சரிகிறது.. தங்கத்தின் மதிப்பு கடுமையாக உயருகிறது என்று டிரம்ப் தனது சமூக வலைதள பக்கங்களில் கூறி உள்ளார்.
எதிர்க்கட்சிகள் எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளன. அது சவாலான வாய்ப்பு. ஆனாலும் அதை அமெரிக்காவிற்கு சாதகமாக நான் மாற்றிக்கொள்வேன் என்று டிரம்ப் கூறி உள்ளார்.
முடங்கிய அமெரிக்க அரசு
அத்தியாவசியமற்ற அரசு சேவைகளை நிறுத்த இதன் மூலம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது போக விமானப் பயணத்தைத் தடைசெய்யலாம், முக்கியமான பொருளாதார அறிக்கைகளை தாமதப்படுத்தலாம் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் சிறு வணிக கடன் அலுவலகங்களை மூடலாம் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியமில்லாத விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
தங்கம் விலை உயரும்
அமெரிக்க அரசு முடங்கியதால் இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மிக கடுமையாக, வேகமாக உயரும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாகவே அமெரிக்காவில் இன்று அதிகாலை தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. அதாவது 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் மிக சிறந்த மாதமாக இது மாறி உள்ளது.
தீபாவளி நேரத்தில் தங்கம் விலை உயர்வு
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. தீபாவளி அன்று தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும் என்று முதலீட்டு வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
தங்கத்தின் விலை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், இது முதலீடு செய்ய சரியான நேரமா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் விலை ஏன் எவ்வளவு உயரும்? மேலும் எவ்வளவு உயரக்கூடும்? என்பதை இங்கே பார்க்கலாம்.
சர்வதேச அளவில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை முதன்முறையாக 3,840 டாலர்களைக் கடந்துள்ளது. இந்திய சந்தையில், 10 கிராம் தங்கத்தின் விலை 1,17,800 ரூபாயைத் தாண்டி வர்த்தகமாகிறது. முதலீட்டாளர்களுக்கு இது கிட்டத்தட்ட 17% லாபத்தை வழங்கியுள்ளது.
ஏற்ற இறக்கமாகவே இருக்கும்
பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, தங்கம் மற்றும் வெள்ளி இரண்டின் விலைகளும் குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். இருப்பினும், 1,16,000 ரூபாய்க்கு மேல் தங்கத்தில் முதலீடு செய்வதை கருத்தில் கொள்ளலாம் என்று அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட இந்த திடீர் உயர்வு சந்தையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. முதலீட்டாளர்கள் பங்குகளில் இருந்து பணத்தை எடுத்து தங்கம், வெள்ளி மற்றும் கிரிப்டோ போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் மாற்றி வருகின்றனர். இந்த போக்கு உலகளவில் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications