ரூ.440 கோடி நிதி வேண்டும்.. பல மாகாணங்களில் வழக்கு தொடுக்கும் டிரம்ப்.. செலவை சமாளிக்க அதிரடி பிளான்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை எதிர்நோக்கி இருக்கும் அதிபர் டிரம்ப், பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடுக்க உள்ளார். இதற்காக அவர் 440 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் டிரம்ப் தோல்வியை எதிர்நோக்கி உள்ளார். கடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்ற அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின், ஜார்ஜியா, பென்சில்வேனியா போன்ற மாகாணங்களில் டிரம்ப் தோல்வி அடைவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தோல்வியை எதிர்நோக்கி இருக்கும் டிரம்ப்.. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துவிட்டது என்று புகார் வைத்துள்ளார்.தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

புகார்
தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துவிட்டது. முறைகேடாக பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகளை எண்ணி உள்ளனர். அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின், ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணங்களில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும், அங்கு தபால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும், பிடன் வெற்றி தவறானது என்று அறிவிக்க வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார்.

கோரிக்கை
இதற்காக டிரம்ப் வழக்கு தொடுக்க உள்ளார். அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின், ஜார்ஜியா, பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் டிரம்ப் வழக்கு தொடுக்க உள்ளார். இதில் மிச்சிகன், ஜார்ஜியா, பென்சில்வேனியாவில் டிரம்ப் தொடுத்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை. இதனால் அவர் மீண்டும் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

மேல்முறையீடு
இதற்காக அவர் 440 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளார். குடியரசு கட்சி சார்பாக 440 கோடி ரூபாய் நிதி திரட்ட அவர் திட்டமிட்டு உள்ளார். அதிபர் டிரம்ப் தொடுக்க உள்ள வழக்குகளில் செலவு செய்வதற்காக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடுக்க உள்ளதால் பல கோடி செலவாகும் என்பதால் இந்த நிதி திரட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை
அதிபர் தேர்தலின் போது டிரம்பிற்கு நிதி கொடுத்தவர்களிடம் மீண்டும் இதற்காக நிதி கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் வியாபார ரீதியாக டிரம்பிற்கு நெருக்கமாக இருக்கும் நபர்களிடமும் நிதி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் டிரம்ப் மிகப்பெரிய சட்ட போராட்டத்திற்கு தயாராகி வருகிறாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications