நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்பவே முடியலை.. அப்படின்னா அத்தனையும் பொய்யா.. அத்தனையும் வீணா.. அமெரிக்கர்கள் மன நிலைதான் என்ன?

டிரம்ப் வெற்றி பெறுவதில் இழுபறி நீடித்து வருகிறது

Google Oneindia Tamil News

நியூயார்க்: பிடன் வெற்றி பெறுவதாகவே வைத்து கொள்வோம்.. ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்தால் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது,.

ஜார்ஜை கொலை செய்தபோது, உலகமே இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் குதித்தது.. அமெரிக்காவே பற்றி எரிந்தது.. மீண்டும் ஒரு புரட்சிக்கு தயாராவதாகவே அந்த போராட்டம் கருதப்பட்டது.

ஆர்ப்பாட்டம் செய்தவர்களை எல்லாம் டிரம்ப் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.. போலீசாரையே மிரட்டி கொண்டிருந்தார். அதனால் எப்படியும் இந்த தேர்தலில் சறுக்கி விழுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

வாயை திறந்தாலே பொய்... டிரம்ப்புக்கு எதிராக ஒன்றிணைந்த அமெரிக்க ஊடகங்கள்.. நேரலை ஒளிபரப்பு 'கட்' வாயை திறந்தாலே பொய்... டிரம்ப்புக்கு எதிராக ஒன்றிணைந்த அமெரிக்க ஊடகங்கள்.. நேரலை ஒளிபரப்பு 'கட்'

தேர்தல்

தேர்தல்

கொரோனா விஷயத்திலும் அதேதான் மக்களின் மனநிலை என்று யூகிக்கப்பட்டது.. என்ன ஆனாலும் சரி, லாக்டவுன் போட முடியாது என்ற பிடிவாதத்தை அவர் காட்டி கொண்டே இருந்தார்.. வரப்போகும் தேர்தல் தான் தனக்கு முக்கியம் என்பதையும் பகிரங்கமாக சொன்னார்.. நாடு பொருளாரத்தில் வீழ்வதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.. அதனாலேயே லாக்டவுனை அமல்படுத்த தயக்கம் காட்டினார்.. கொத்து கொத்தாக மக்கள் மடிந்தபோதும், அலட்சியத்தையே பதிலாக்கி தந்தார்.

சர்ச்சை

சர்ச்சை

இதைதவிர அடாவடிப்பேச்சு, சர்ச்சை கருத்துக்கள், பொய்கள்... வறட்டு பிடிவாதம் எல்லாவற்றும் மேலாக இனவிரோதம், உச்சத்துக்கு போன நிர்வாகக் குளறுபடி என மொத்தமாக மக்களின் அதிருப்தியை கடந்த காலங்களில் மூட்டை மூட்டையாக சம்பாதித்து வைத்தவர்.

இழுபறி

இழுபறி

இவ்வளவு இருந்தும், இன்று பிடனுக்கு நிகராக, இழுபறியில் டிரம்ப்பால் வாக்குகளை எப்படி பெற முடிந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது.. 48 சதவிகித அமெரிக்கர்களின் ஆதரவு உள்ளது.. அதிபர் தேர்தலில் வென்று எப்படியாவது மறுபடியும் ஆட்சி அமைக்கலாம் என்று நினைத்த டிரம்பிற்கு இந்த தேர்தல் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளதை மறுக்க முடியாது.. அதேசமயம், மோசமான தோல்வி என்றும் சொல்லிவிட முடியாது.

 சுகாதார கட்டமைப்பு

சுகாதார கட்டமைப்பு

ஒருவேளை கொரோனா தொற்றை சரியாக கையாண்டிருந்தால் டிரம்ப் வெற்றி பெற்றிருப்பார்.. இந்த ஒருவருட காலத்தில் அமெரிக்காவின் சுகாதார கட்டமைப்பு மிக மோசமாக இருந்ததும், வேலை இழப்பு, மக்களின் அதிருப்தி உட்பட பலவும் இந்த சறுக்கலுக்கு காரணம்.. ஆனால், எப்படி டிரம்புக்கு இவ்வளவு வாக்குகள் சாத்தியமானது?

 மீடியா

மீடியா

அங்கு கோர்ட்டும், மீடியாவும் தன்னிச்சையாக செயல்படுபவை.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், கடந்த காலங்களில் டிரம்பின் ஒவ்வொரு அசையும் தோலுரித்து காட்டியது அங்கிருக்கும் மீடியாதான்.. அப்படி இருக்கும்பட்சத்தில் உலக மக்களுக்கே டென்ஷனை ஏற்றும் அளவுக்கு இந்த இழுபறி ஏன்? டிரம்பின் இனவெறி மிக முக்கிய பங்கு வகிப்பதை மறுக்க முடியாது.

 இனவேறி

இனவேறி

கேம்ப்ரிட்ஜ், அனலடிக்கா போன்ற நிறுவனங்கள் டிரம்புக்கே அதிகம் உபயோகப்பட்டுள்ளன.. அதற்காக டிரம்பை ஆதரிப்பதற்கு, இனவெறி மட்டும்தான் காரணமா என்பதையும் ஒரேடியாக சொல்லிவிட முடியவில்லை. உலக நாடுகளுக்கே அமெரிக்காதான் வல்லரசு.. மெத்த படித்த மேதாவிகள் நிறைந்த நாடு.. அப்படியானால் படிக்கும், படிப்புக்கும், புத்திக்கும் சம்மந்தமில்லையா? சிந்தனை திறன் குறைவானதன் வெளிப்பாடா? இனவாதத்தை வளைத்து போட்டதன் விளைவா?

 புதிய அதிபர்

புதிய அதிபர்

எது எப்படி இருந்தாலும் தங்களுக்கான தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் உரிமை அந்தந்த நாட்டு மக்களுக்கு நிச்சயம் உண்டு. அமெரிக்காவைப் பொறுத்தவரை அந்த நாட்டுக்கு புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல்.. ஆனால் உலகின் பிற பகுதியினருக்கோ அமெரிக்காவுக்கு தலைவராக யார் வந்தால் நமக்கு நல்லது என்ற எண்ணம்தான் உள்ளது.

 வித்தியாசம்

வித்தியாசம்

ஆனால் அமெரிக்கர்களுக்கு அந்தப் பிரச்சினை கிடையாது, கவலையும் கிடையாது.. நமக்கு யார் சரிப்பட்டு வருவார் என்று மட்டுமே அவர்கள் பார்ப்பார்கள்.. இந்த வித்தியாசத்தை நிச்சயம் நாம் உணர வேண்டும்.. அதுதான் இந்தத் தேர்தல் மட்டுமல்லாமல், ஒவ்வொரு அமெரிக்க தேர்தலும் நமக்கு எடுத்துரைக்கும் பாடமாகும்.

English summary
US Presidential Election: The drag on the presidential election continues
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X