ட்ரிக்கர் பட்டனை அழுத்திய டிரம்ப்! அமெரிக்காவில் அஞ்சி நடுங்கி நிற்கும் 5,32,000 பேர்! என்ன காரணம்?
நியூயார்க்: அமெரிக்க வெளியுறவுத்துறை அரசியலில் ட்ரிக்கர் பட்டன் என்று பிரபலமாக அழைக்கப்படும் முக்கியமான நடவடிக்கை ஒன்றை அதிபர் டிரம்ப் எடுக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி நூறாயிரக்கணக்கான கியூபர்கள், ஹைட்டியர்கள் (ஹைட்டி நாட்டை சேர்ந்தவர்கள்), நிகரகுவான்கள் (Nicaraguaவை சேர்ந்த மக்கள்) மற்றும் வெனிசுலா நாட்டினருக்கான சட்டப் பாதுகாப்பை ரத்து செய்யப்போவதாக டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அவர்களை ஒரு மாதத்தில் நாடுகடத்த போவதாக டிரம்ப் அறிவித்து உள்ளார்.
அக்டோபர் 2022 கணக்குப்படி அமெரிக்காவில் வசித்து வரும் இந்த நான்கு நாடுகளைச் சேர்ந்த சுமார் 5,32,000 பேருக்கு இந்த உத்தரவு பொருந்தும். அவர்கள் 30 நாட்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களை வெளியேற்றும் விதமாகத்தான் ட்ரிக்கர் பட்டனை டிரம்ப் அழுத்த முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இவர்களின் சட்ட பாதுகாப்பு நீக்கப்படும். அதாவது அவர்களுக்கு அமெரிக்காவில் என்ன கொடுமை நேர்ந்தாலும் அவர்கள் வழக்கு போட முடியாது. அவர்களை போலீசோ, கோர்ட்டோ பாதுகாக்காது. இதையடுத்து அவர்களை ஒரு மாதத்தில் நாடுகடத்த போவதாக டிரம்ப் அறிவித்து உள்ளார்.

யாரெல்லாம் அனுப்பப்படுகிறார்கள்
டிரம்ப் நிர்வாகம் ஆவணமற்ற அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களை மட்டுமே குறிவைக்கிறது. முந்தைய ஜோ பிடன் நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அடுத்தது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இதற்காக போர் விமானம், பயணிகள் விமானம் இரண்டும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த சில நாட்களில் டெக்சாஸின் எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படுவார்கள் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இதுவரை, ராணுவ விமானங்கள் மூலம் குவாட்டமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு மக்கள் நாடு கடத்தப்பட்டனர். இப்போது இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
சாதாரண விமானம்
அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டினரை ராணுவ விமானத்தில் நாடு கடத்தும் முடிவை டிரம்ப் கைவிட உள்ளாராம். இதற்காக சாதாரண விமானம், அதாவது பயணிகள் விமானத்தை பயன்படுத்த டிரம்ப் முடிவு செய்துள்ளாராம்.
அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானத்தில் ஒருவரை நாடு கடத்த குறைந்தபட்சம் $4,675 (ரூ. 4.07 லட்சம்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு வணிக விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட்டின் விலையை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
ICE வகை விமானங்களை நாடு கடத்த பயன்படுத்தினால் மிகவும் மலிவு விலையில் அதாவது ஒரு நபருக்கு ரூ. 55,000 என்ற செலவில் நாடு கடத்த முடியும்.
ஆனால் சாதாரண விமானத்தில் நாடு கடத்தி அது விபத்துக்கு உள்ளானால்.. அது இரண்டு நாட்டு பிரச்சனையாக மாறும். வேறு நாட்டு குடிமகனை கொன்றதாக மாறிவிடும். இதை தடுக்கவே C-17 போர் விமானத்தை டிரம்ப் பயன்படுத்துகிறார்.
நாடு கடத்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் C-17 போக்குவரத்து விமானம், ஒரு மணி நேரத்துக்கு $28,500 (ரூ. 24,90,559) இயக்கச் செலவாகும், இந்தியாவுக்குச் செல்லும் விமானம் 12 மணி நேரத்திற்கும் அதிகமாகும். கிட்டத்தட்ட 48 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும். அதாவது 119546832 ரூபாய் செலவு. அதாவது 200 பேர் நாடு கடத்தப்பட்டால் கிட்டத்தட்ட ஒரு நபருக்கு 6 லட்சம் வரை செலவு ஆகும். அமெரிக்க அரசின் துல்லியமான கணக்குப்படி ஒரு நபருக்கு நான்கரை லட்சம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
-
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்!












Click it and Unblock the Notifications