நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரிய அண்ணன் அமெரிக்கா... நிறவெறியை தூண்டிய அதிபர் டிரம்ப்... காரணம் இருக்கு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: கருப்பினத்தவர் அதிகம் வசிக்கும் பால்டிமோர் மாவட்டம், எலித்தொல்லை மிகுந்த அருவருப்பான நகரம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி இருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் நிறவெறியை தூண்டிவிட்டு தேர்தல் ஆதாயம் அடைவதற்கு டிரம்ப் கையாளும் அரசியல் தந்திரம் இது என பலர் கருதுகின்றனர்.

USA President Trump: So sad that Elijah Cummings has been able to do so little for the people of Baltimore

அதே சமயம், நிறவெறி தொடர்பான இந்த கருத்துக்காக டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து கீழே இறக்கும் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியான (ஜனநாயக) மக்களாட்சிக் கட்சியை சேர்ந்த மின்னெசோட்டா மாநிலத்தின் பெண் எம்.பி. ஈஹான் ஓமர், நியூயார்க்கை சேர்ந்த பெண் எம்.பி. அலெக்சாண்டிரியா ஓகசியோ-கோர்ட்டெஸ், மாஸ்ஸாசூசெட்ஸ் பெண் எம்.பி. அயான்னா பிரெஸ்லி, மிச்சிகன் பெண் எம்.பி. ரஷிதா டிலாய்ப் ஆகிய 4 எம். பிக்களை கருப்பினத்தவர் என காரணம் காட்டி, சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு சில நாட்களுக்கு முன் பேசி டிரம்ப் சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது மீண்டும் நிறவெறியைத் தூண்டும் வகையில் டிரம்ப் பேசியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேரிலேண்ட் மாநிலம் பால்டிமோர் நகரைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் எலிஜா கம்மிங்ஸ் (Elijah Cummings) என்பவரைக் குறிவைத்து டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், பால்டிமோர் மாவட்டம், எலிகளால் கொறிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சிதறிக் கிடக்கும் அருவருப்பான நகரம் என்று கூறியுள்ளார்.

பால்டிமோரில் வசிப்பதற்கு ஒருவரும் விரும்ப மாட்டார்கள் என்றும், அமெரிக்காவிலேயே அது மோசமான நகரம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மெக்சிகோ எல்லையில் இருக்கும் அகதிகளைக் காட்டிலும் மோசமானவர்கள் வசிக்கும் நகரம் என்றும் பால்டிமோரை டிரம்ப் சாடியுள்ளார்.

அம்மாவட்டத்தில் இருப்போரில் 52 விழுக்காட்டினர் கருப்பினத்தவர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் நிலையில், டிரம்ப் இவ்வாறு பேசி இருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
USA President Trump: So sad that Elijah Cummings has been able to do so little for the people of Baltimore. Statistically, Baltimore ranks last in almost every major category.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X