வாஷிங்டனில் அனுமதி இன்றி பறந்த மர்ம விமானம்.. வெள்ளை மாளிகைக்கு பூட்டு.. போர் விமானங்கள் குவிப்பு!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் அதிபரின் வெள்ளை மாளிகை இருக்கும் வாஷிங்டன் மீது அனுமதி இன்றி மர்ம விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்கு பின் விமானங்களின் போக்குவரத்து அதிகம் கண்காணிக்கப்படுகிறது. இதற்காக நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வெள்ளை மாளிகைக்கு மேலே பறக்கவும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மர்ம விமானம் ஒன்று இன்று வெள்ளை மாளிகைக்கு அருகே பறந்துள்ளது.ஆனால் இது என்ன விமானம், யாருக்கு சொந்தமானது என்ற விவரம் வெளியாகவில்லை.

பூட்டு போடப்பட்டது

பூட்டு போடப்பட்டது

இதனால் தற்போது வெள்ளை மாளிகைக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. அங்கு பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அங்கு வந்திருந்த விசிட்டர்கள் எல்லோரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

தாக்குதல் அச்சம் காரணமாக அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு கீழே இருக்கும் பங்கருக்குள் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு இருக்கும் வார் ரூமில் அவர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஸ்பெஷல் போர்ஸ் மற்றும் விமானப்படை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

விமான தடை

விமான தடை

இதனால் வாஷிங்டன் மீது விமானம் பறக்க தற்போது தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது அங்கு போர் விமானங்கள் குவிக்கப்பட்டு உள்ளது. வாஷிங்டன் டிசி மேல் இந்த விமானங்கள் வட்டமிட்டப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

டிரோன் எப்படி

டிரோன் எப்படி

அதேபோல் சிறிய சிறிய டிரோன் விமானங்களும் வானில் பறந்து சோதனை செய்து வருகிறது. வெள்ளை மாளிகையை நோக்கி செல்லும் தரை வழி பாதைகளும் இதனால் மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+