அது ஏன் 6 குண்டுகள்? அமெரிக்க ராணுவ மையங்கள் மீது 6 ஏவுகணைகளை.. ஈரான் ஏவியது ஏன்? செம கனெக்சன்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. 6 ஏவுகணைகளை அனுப்பி ஈரான் அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரான் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியது. போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் தாக்கப்பட்டன. போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு தடத்திற்கு 2 குண்டுகள் வீதம் 6 குண்டுகள் இதில் பயன்படுத்தப்பட்டது.

இதற்காக முதல்நாள் மாலையே அமெரிக்கா 4 B-2 stealth bombers விமானங்களை ஈரான் நோக்கி அனுப்பியது. குண்டுகளுடன் சென்ற இந்த விமானம் நடுவழியில் எரிபொருள் நிரப்பியது. அப்போதே தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Why did Iran exactly use 6 missiles against USA bases in Qatar

அதிக எடை கொண்ட குண்டுகளை ஏற்றி சென்றதால், இந்த விமானங்கள் குறைந்த எரிபொருளுடன் டேக் ஆப் செய்தது. இதனால் நடுவழியில்தான் கூடுதல் எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போதே தாக்குதல் நடத்த போவது உறுதியானது. இந்த நிலையில்தான் அமெரிக்கா ஈரான் அணு உலை மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் நடத்தியது. ஈரானின் அணுசக்தியை முடக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்டது.

ஸ்டெல்த் வகை விமானங்களான் B-2 stealth bombers பயன்படுத்தி.. 30,000-lb எடை கொண்ட குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. "பங்கர் பஸ்டர்" எனப்படும் குண்டுகள் ஆகும் இவை. இதன் மூலம் ஈரானின் சுரங்க அணு ஆயுத அமைப்புகள் அழிக்கப்பட்டு உள்ளன. மொத்தமாக 6 குண்டுகளை ஈரான் மீது இஸ்ரேல் பயன்படுத்தியது.

ஈரான் பதிலடி

எதிர்பார்த்தபடியே அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவ நிறுவங்களில் ஒன்றான கத்தாரில் உள்ள அல் உடேத் விமானத் தளம் உட்பட பல தளங்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

கத்தார் மீது 5 ஏவுகணைகளும், ஈராக் மீது ஒரு ஏவுகணையும் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்கள் இரண்டுமே அந்த நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளை இலக்காகக் கொண்டவை என்று கூறப்படுகிறது.

அதாவது அமெரிக்காவை போலவே 6 ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரான் இந்த அட்டாக்கை பயன்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவப் தளவாடங்களை குறிவைத்து "பஷாரத் அல்-ஃபத்" என்ற பெயரில் இந்த தாக்குதலை ஈரான் அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை எதிர்பார்த்து கத்தார் தனது வான்வெளியை மூடியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போர் விமானங்கள் பாரசீக வளைகுடா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விரைந்துள்ளன. கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகம் அங்குள்ள மக்களை வெளியேறும்படி அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க குடிமக்களையும் உடனடியாக மறைவான, தாழ்வான தங்குமிடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் பாரசீக வளைகுடா முழுவதும் பரவலான ஜி.பி.எஸ் சிக்னல் ஜாமிங் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+