ஊட்டி டிரிப்பில் முக்கிய அமைச்சரை கழற்றிவிட்ட முதல்வர் ஸ்டாலின்! பம்பரமாக சுழன்று பணியாற்றிய ஆ.ராசா!
நீலகிரி: ஊட்டி பயணத்தில் முக்கிய அமைச்சர் ஒருவரை முதல்வர் ஸ்டாலின் கழற்றிவிட்ட நிகழ்வு தான் கோவை மாவட்ட திமுகவினர் மத்தியில் பேசு பொருளாக உள்ளது.
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜி முதலமைச்சருடன் ஒரே வாகனத்தில் பயணித்து ஊட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது போல் நடக்கவில்லை.
பொங்கலூர் பழனிசாமி கோவை மாவட்ட அமைச்சராக இருந்த காலத்தில், நீலகிரி, திருப்பூர், ஈரோடு என கொங்கு மாவட்டங்களுக்கு கருணாநிதி எங்கு சென்றாலும் அவருடன் ஒரே வாகனத்தில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி பயணம்
முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று நீலகிரி மாவட்டம் சென்றுள்ளார். நேற்று முன் தினம் சென்னையிலிருந்து புறப்பட்டு கோவை வந்தடைந்த அவர், நேற்று தொழிலதிபர்களுடன் கலந்துரையாடல், தொல்பொருள்
கண்காட்சி துவக்க விழா என இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோவை நிகழ்ச்சிகளின் போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, செந்தில்பாலாஜி, வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகிய மூவரும் முதலமைச்சருடன் இருந்தனர்.

கோவை மாவட்டம்
இதனிடையே கோவை மாவட்ட நிகழ்ச்சிகளை நேற்று பிற்பகலுடன் முடித்துக்கொண்டு ஊட்டிக்கு புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அப்போது கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜியும் முதலமைச்சர் ஸ்டாலினுடன் சென்று ஊட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்
அதற்கு முதல்வர் தரப்பு இடம்கொடுக்கவில்லை.

ஒரு உதாரணம்
பொதுவாக ஒரு உதாரணத்துக்கு முதல்வர் ஸ்டாலின் புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் என சென்றால் திருச்சி மாவட்ட திமுகவின் முக்கிய முகமாக திகழும் கே.என்.நேரு அந்தப் பயணத்தில் நிச்சயம் இடம்பெறுவார். இதேபோல் தான் தென் மாவட்டங்கள் என்றால் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனோ, ஐ.பெரியசாமியோ முதல்வர் நிகழ்ச்சியில் முழுமையாக இடம்பெறுவார்கள். அந்த
வகையில் கொங்கு மண்டல தலைநகராக விளங்கும் கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சர் என்கிற முறையில் செந்தில்பாலாஜியும் முதல்வரின் ஊட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
Recommended Video

பொங்கலூர் பழனிசாமி
பொங்கலூர் பழனிசாமி கோவை மாவட்ட அமைச்சராக இருந்தக் காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி கொங்கு மாவட்டங்களுக்கு விசிட் அடித்தால் அவரும் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் உடன் இருப்பார். இதனிடையே நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா முதல்வருக்கான வரவேற்பு ஏற்பாடுகள் தொடங்கி வழியனுப்பி வைக்கும் நிகழ்வு வரை பார்த்து பார்த்து பணிகளை செய்து வைத்துள்ளார். உதாரணத்துக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரும் சாலையில் ஒரு இடத்தில் கொடி கம்பம் சற்று சாய்ந்து இருந்ததை கண்டு அவரே காரை விட்டு இறங்கி அதனை சரிப்படுத்தினார்.

விழா ஏற்பாடு
அதேபோல் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகளையும் பந்தல் சிவா மூலம் ஆ.ராசா கவனித்துக்கொண்டார். உதகை மலர் கண்காட்சி தொடக்க விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications