தி.க. பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி கார் விபத்தில் மரணம்
திக பொருளாளர் பிறைநுதல் செல்வி சாலை விபத்தில் பலியானார்.
குன்னூர்: திராவிடர் கழக பொருளாளர் பிறைநுதல் செல்வி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 72.
2013 முதல் திக-வின் முக்கிய பொறுப்புகளை வகித்தவர் பிறைநுதல் செல்வி ஆவார். குன்னூரில் வசித்து வந்தார். திருப்பூரில் நடைபெற்ற திக தலைவர் வீரமணியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டுவிட்டு, திரும்பவும் குன்னூருக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
காட்டேரி என்ற இடத்தில் அவரது கார் வந்தபோது, எதிரே வந்த கார் பலமாக நேருக்கு நேர் மோதி பயங்கரமான விபத்து ஏற்பட்டது.

கார் விபத்து
இந்த விபத்தில் பிறைநுதல் செல்வி அணிந்திருந்த கார் சீட் பெல்ட்டின் கொக்கி அவரது வயிற்றில் குத்தி பலமான காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக குன்னூர் தனியார் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் உயிரிழந்தார்.

மாநில பொருளாளர்
நீலகிரி மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தவர் பிறைநுதல் செல்வி. இவர் திராவிடர் கழகத்தின் மேல் அதீத பற்றுள்ளவர். திக பொருளாளராக முன்பு கோ.சாமிதுரைதான் பொருளாளராக இருந்தார். அவர் மறைவுக்கு பிறகு திக பொருளாளராக பிறைநுதல் செல்வி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013-ல் சென்னையில் நடைபெற்ற திக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி வீரமணி முன்னிலையில் பொருளாளராக அறிவிக்கப்பட்டார்.

விருப்ப ஓய்வு
இவர் ஒரு டாக்டர். பி.எஸ்.ஸி, எம்.பி.பி.எஸ், டி.ஜி.ஓ. பட்டம் பெற்றவர். 22 ஆண்டு காலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மருத்துவராகவும், கோத்தகிரி தலைமை ஆஸ்பத்திரியில் தலைமை டாக்டராகவும், மருத்துவத்துறையில் துணை இயக்குநராகவும் பதவி வகித்தவர். அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று திராவிடர் கழக கள பணிக்காக தன்னை முழுவதுமாகவே அர்பணித்துக் கொண்டார். திராவிடர் கழக பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர் இவர்.

மருத்துவர்
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இவரது கணவர் கவுதமனும் ஒரு டாக்டர்தான். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களும் பெற்றோரை போன்றே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்தான்.

நல்லடக்கம்
நீலகிரி மாவட்ட மக்கள் பிறைநுதல் செல்வி மறைவால் துயரத்தில் உள்ளனர். அவரது உடல் இன்று மாலை 4 மணிக்கு குன்னூரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications