"அந்த" நொடி.. ஒன்னுமே புரியல.. நிஜமா அழுதுட்டேங்க.. நெகிழ்ந்த முதுமலை யானை பராமரிப்பு 'ஆஸ்கர்' தம்பதி
முதுமலை தம்பதிகள் யானைகள் வளர்த்தது குறித்து நெகிழ்ச்சியுடன் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்
ஊட்டி: "ரகுவுக்கு வயித்துக்குள்ளே புண்ணு வந்துடுச்சு.. சோறு தரக்கூடாதுன்னு சொன்னாங்க.. அதனால், தேங்காய் எண்ணெய்யில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கிளறி, கீரையை அதில் போட்டு வதக்கி, ரகுவுக்கு ஊட்டிவிட்டேன்.. என் ரகுவுக்கு ஊட்டி விட்டபிறகுதான் நான் சாப்பிடுவேன் என்று பெள்ளி சொல்லும்போது, கண்களில் முட்டிக்கொண்டு நிற்கிறது ஆனந்த கண்ணீர்..
தமிழகத்தின் அடர்ந்த முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும், பழங்குடி மக்களான பொம்மன் + பெள்ளியின் கதைதான், இன்று உலகம் முழுக்க பேசுபொருள் ஆகியுள்ளது.
"எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்" என்ற ஆவணப்படம் மூலம், இந்த தம்பதிகள் மீது மீடியா வெளிச்சம் இன்று பாய்ந்துள்ளது.. பொம்மன், பெள்ளி என்ற பெயர்கள், உலகின் அத்தனை பகுதிகளிலும் நெகிழ்ச்சியுடன் உச்சரிக்கப்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்த கேமராக்களையும், நீலகிரி காட்டுக்குள் கொண்டுவர செய்த இந்த தம்பதிகள் யார்? ஆணவப்படத்தின் ஆழ்பொருள் என்ன?

2017ம் ஆண்டு -
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகத்தில் அய்யூர் பகுதியில் ஒரு யானை குட்டி, தன்னுடைய தாயை பிரிந்துவிடுகிறது.. அந்த 3 மாத குட்டிக்கு, உடம்பிலோ, ரணங்களும், காயங்களும், வெட்டுக்களும் படர்ந்து கிடக்கின்றன.. அதன் வால் வெட்டுப்பட்டுள்ளது.. உயிரும் மெல்ல மெல்ல பிரிந்து கொண்டிருக்கிறது. சன்னமான முனகலுடன், இறக்கும் தருவாயில் உள்ள அந்த குட்டி யானை, காட்டுக்குள் கண்டெடுக்கப்படுகிறது.. உயிர்பிழைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. ஆனால், காப்பகத்தில் இருந்த பலரும், யானையை பிழைக்க வைப்பது கடினம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்..

குட்டியானை
அந்த முயற்சியில் இருந்து விலகியும் கொள்கிறார்கள்.. அப்போதுதான், மனசு கேட்காமல், யானையை காப்பாற்ற, ஈரம் கசியும் இதயத்துடன் முன்வருகிறார் முதுமலை புலிகள் காப்பகத்தின் பாகன் பொம்மன். அந்த குட்டி யானையை அங்கேயே தங்கி பராமரிக்கவும் துவங்குகிறார். உடல்நிலை அந்த குட்டிக்கு தேறி துவங்கியதுமே, வனத்துறை அனுமதியுடன், அதை தான் வசித்து வரும் முதுமலைக்கு கொண்டு வருகிறார். குட்டியை எப்படியும் தன்னால் காப்பாற்ற முடியும் என்று தடித்த நம்பிக்கையுடன் அவரது பராமரிப்பு பணியும் துவங்குகிறது.

அம்மு ரகு
பொம்மனின் இந்த நம்பிக்கையில் உறுதுணையாக பங்கேற்கிறார் மனைவி பெள்ளி.. யானைகுட்டிக்கு ரகு என்று பெயரை சூட்டுகிறார்கள் இந்த தம்பதிகள்.. பின்னர் இதேபோல, தாயை பிரிந்த அம்மு என்ற பெண் குட்டி யானையையும் பராமரிக்கும் பொறுப்பு பெள்ளிக்கு தரப்படுகிறது. ஆக, பொம்மன், பெள்ளி, ரகு, அம்மு என்று 4 பேருமே ஒரே குடும்பமாக பின்னிப்பிணைந்து வாழ்கிறார்கள். அத்துடன், தம்பதிகளுக்கும், யானைகளுக்கும் இடையே நுட்பமான உணர்வும், ஆழமான புரிதலும், அன்பின் அடிப்படையில் இயங்க துவங்குகிறது.

உணர்வுப்பிழம்பு
இந்த உணர்வுப்பிழம்புகள்தான், கார்த்திகி கன்சால்வ்ஸ் இயக்கத்தில், குனீத் மோங்கா தயாரிப்பில் ஆவணப்படமாக எடுத்து, 'தி எலிபெண்ட் விஸ்பரரஸ்' என்ற பெயரிலும் வெளியாகி உள்ளது. அத்துடன், இந்த ஆவணப்படம் இன்று ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளது.. உலக சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட நிலையில், எந்தவித பரபரப்பும் இல்லாமல், இயல்பாய் இயங்கி கொண்டிருக்கிறார் பொம்மு. "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக பொம்முவை நேரில் சந்தித்தோம்.. யானை குட்டிகளை வளர்த்தது குறித்தும், ஆஸ்கர் கிடைத்தது குறித்தும் அவரிடம் கேட்டோம்.. நெகிழ்ந்துபோய் பொம்மு நம்மிடம் சொன்ன வார்த்தைகள்தான் இவை:

குதறிய நாய்கள்
"தேன்கனிக்கோட்டையில், ஒரு யானை குட்டி அடிபட்டு இருப்பதாக சொன்னார்கள்.. அதனால், நான் நேரடியாக கிளம்பி வந்தேன்.. அந்த குட்டியை, ஏற்கனவே நாய்கள் எல்லாம் கடித்து குதறியிருந்தன.. அதற்கு பிறகு, அந்த நாய்களை இங்குள்ளவர்களே பிடித்து கட்டிப்போட்டிருந்தார்கள்.. எனக்கு அந்த குட்டி யானையை பார்க்கும்போதே ரொம்ப பாவமாக இருந்தது.. இங்கேயே கிட்டத்தட்ட 2 மாதங்கள் தங்கியிருந்து, பராமரித்தேன்.. அதன்பிறகு முதுமலைக்கு கொண்டு சென்றுவிடலாம் என்று சொல்லவும், முதுமலைக்கு கொண்டு சென்றோம். உடம்பெல்லாம் புண்கள் இருந்தன.. குட்டியின் நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போல, பக்கத்திலேயே இருந்து கவனித்து கொண்டேன்..

ரொம்ப கஷ்டம்
ரகுவை அப்படித்தான் நாங்கள் வளர்த்தோம்.. அதுக்குபிறகு, சத்தியமங்கலத்தில் இருந்து அம்முக்குட்டி வந்தது.. அதையும் நீங்கதான் வளர்க்கணும், வேற யாரிடமும் தர விருப்பமில்லை என்று சொல்லி எங்களிடம்தான் ஒப்படைத்தார்கள். ரகு, அம்முக்குட்டி, இந்த 2 குட்டிகளையும் நாங்கள் வளர்த்தோம். ரொம்ப கஷ்டப்பட்டுதான், அந்த குட்டிகளை வளர்த்து, கடைசியில் ஒப்படைத்தோம்.. அப்படி ஒப்படைக்கும்போது மனசு கஷ்டமா இருந்தது.. சின்னக்குட்டியில் இருந்து வளர்த்துவிட்டு, திடீரென திருப்பி ஒப்படைக்கும்போது கஷ்டமாக இருந்தது.. நான் அழுதுட்டேன். யானைகளை திருப்பி தரும்போது..

டாக்குமெண்ட்
எனக்கு ஒன்னுமே புரியல, குட்டிகளை பார்க்காமல், சாப்பிடக்கூட முடியாமல் என் வீட்டில் இருந்தாங்க.. "அதுக்கு என்ன செய்றது? ஒன்னுமே பண்ண முடியாது, அது கவர்ன்மென்ட் வேலை.. ஒப்படைக்க சொன்னால், நாம திருப்பி தந்திடணும்" என்று சொல்லி சமாதானம் செய்தேன். இன்னைக்கு ஆஸ்கர் அவார்டு கிடைக்க காரணமே கார்திகி தான்.. அவர்தான் டாக்குமெண்ட் எடுக்கலாம்னு சொல்லி, இத்தனை முயற்சிகளை எடுத்தார்.. இதனால், எங்களுக்கும், முதுமலைக்கும், வனத்துறைக்கும் ரொம்ப சந்தோஷம்" என்று பூரித்து சொல்கிறார் பொம்மு.

கவர்ன்மென்ட்
பின்னர், பொம்முவின் மனைவி பெள்ளி இதுகுறித்து நம்மிடம் சொல்லும்போது, "நாங்க எல்லாரும் சேர்ந்து உங்களுக்கு உதவி செய்றோம். இந்த குட்டியை மட்டும் பெரிசாக்கி எங்ககிட்ட ஒப்படைச்சிடுங்கன்னு கவர்ன்மென்ட்ல சொன்னாங்க.. நான் காலையிலேயே சுடுதண்ணீர் வைத்து அந்த குட்டியை குளிக்க வைப்பேன்.. அதுக்கப்புறம் உடம்பெல்லாம் புண்களை துடைத்துவிட்டு, அதற்கு மருந்துகளை தடவிவிடுவேன்.. பால் 3 வேளையும் அந்த குட்டிகளுக்கு தரணும். மதியம் ஒருமுறை, சாயங்காலம் 7 மணிக்கு ஒருமுறை, காலையில் 7 மணிக்கு ஒருமுறை, இப்படி 3 நேரமும் பால் தரணும். முதலில் பால்தான் வழங்கி வந்தேன்.. அப்பறம் என் ரகுவுக்கு சோறு ஊட்டி பழக்கறேன் என்று அனுமதி கேட்டு, சோறு ஊட்டினேன்..

தேங்காய் எண்ணெய்
ஆனால், வயித்துக்குள்ளே புண்ணு வந்துடுச்சு, சோறு தரக்கூடாதுன்னு சொன்னாங்க. அதனால், சின்ன வெங்காயம், தேங்காய் எண்ணெய்யில் கீரையை வதக்கி, ரகுவுக்கு ஊட்டிவிட்டேன்.. புண் மெல்ல ஆறியது.. ரகுவுக்கு சோறு ஊட்டியபிறகுதான் நான் சாப்பிடுவேன்.. நான் பேக்கரிக்கு போனால், என்கூடவே ரகு வந்துடும்.. அங்கே ஒரு இடத்தில் நான் உட்கார்ந்துகொண்ட, அந்த இடத்தில் இருக்கும் புல்லை, தானே மேய்ந்து சாப்பிடுவது போல ரகுவை நான் பழக்கிவிட்டேன்.. டாக்குமெண்ட் எடுக்க வந்தப்போகூட, எதுவுமே எங்களுக்கு சொல்லி தந்து காட்சிகளை எடுக்கல..

அடைக்குந் தாழ்
நான் வழக்கமாக என்ன பண்றேனோ, எப்படி நடக்கிறேனோ, எப்படி நிற்கிறேனோ, அதேமாதிரி என்கூடவே சேர்ந்து ரகுவும் பண்ணிடும்.. இதையே டாக்குமெண்ட்ரியில் எடுத்துக்கிட்டாங்க.. இன்னைக்கு விருது கிடைக்க காரணம் வனத்துறைதான்.. ராத்திரி பகல் என்றில்லாமல் நிறைய உதவிகளை எங்களுக்கு செய்தாங்க.. நான் மட்டுமே குட்டியை பெரிசுபண்ண முடியாதே.. வனத்துறை பங்கு இதில் அதிகம்.. எங்களுக்கு கரண்ட் இல்லாமல் இருந்தது, கரண்ட் போட்டு தந்தாங்க.. மழையில் தூங்கறதுக்கு கட்டில் இல்லாமல் இருந்தது, கட்டிலை வாங்கி தந்தார்கள்.. இன்னைக்கு எல்லாரும் ரகுவை பத்தி பேசும்போது எனக்கு என்னவோ பண்ணுது.. இதைவிட சந்தோஷம் வேற என்ன இருக்க முடியும்" என்கிறார் கண்கள் பணிக்க..!!! உண்மைதானே.. அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்!!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications