தமிழ்நாட்டில் முதல்முறையாக சத்தமில்லாத சாதனை.. மின்சார படகு சவாரி.. எங்கே பாருங்க.. மக்கள் மகிழ்ச்சி
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. இதில், ஊட்டி படகு இல்லத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள வசதியானது, மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மலைகளின் அரசி எனப்படும் அழைக்கப்படும் சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு, வருடந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வாடிக்கையாகும்.. முக்கியமாக, கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் நீலகிரியில் அலைமோதும்.

பண்டிகை காலம்: அந்த வகையில், தற்போது பண்டிகை காலம் துவங்கிவிட்டதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.. கோடை சீசன் இல்லாவிட்டாலும்கூட, வார வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்தவண்ணம் உள்ளன. எனவே, வார விடுமுறை தினங்களில் கூட்டம் இனியும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இப்படி ஊட்டிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள், படகு இல்லத்திலிருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய தவறுவதில்லை.. ஏரி கரையோரம் மரங்களில் அமர்ந்திருந்து ஓய்வு எடுக்கும் புள்ளி மூக்கு வாத்துகளையும் பயணிகள் கண்டு உற்சாகமடைந்துவிடுகிறார்கள்.
தேனிலவு: அதேபோல, ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்தில் இருந்தும் படகு சவாரி செய்கிறார்கள்.. பொதுமக்கள் படகு சவாரி செய்ய வசதியாக மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள், மிதி படகுகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி உற்சாகமாக படகு சவாரி செய்து வருகிறார்கள்..
இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக கூடுதல் வசதியை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.. இதன் ஒருபகுதியாக, அந்தவகையில், தமிழ்நாட்டில் முதல்முறையாக மின்சார படகு சவாரியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
உதகை படகு: உதகை படகு இல்லத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மின்சார படகு சவாரிக்கு "டோனட் போட்" என்று பெயரும் வைக்கப்பட்டுள்ளது.. 20 நிமிடம் பயணம் செய்வதற்கு, 5 நபர்களுக்கு ரூ.1,200 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்த இந்த மின்சார படகு சவாரி சுற்றுலா பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
வழக்கமாக படகுகளில் செல்லும்போது, ஏரியில் அமைதியான சூழல் இருந்தாலும், மோட்டார் சத்தம் காதை கிழித்துவிடும்.. அதேபோல தண்ணீரின் வேகத்துக்கு படகு லேசாக தள்ளாடும்.. ஆனால், இப்போது மின்சார படகு என்பதால், சத்தமே இல்லாமல், ஓவராக அசைவும் இல்லாமல், படகுகளில் சுற்றுலா பயணிகளால் செல்ல முடியும்..
வரவேற்பு: மின்சார படகு இப்போதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், சுற்றுலா பயணிகள் இதற்கு உடனடியான ஆதரவை தந்துவிட்டனர்.. ஊட்டி டீயை குடித்துக் கொண்டு, ஊட்டி வர்க்கியை சாப்பிட்டுக் கொண்டும், சத்தமில்லாமல், அமைதியாக படகில் பயணிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications