நீலகிரி பந்தலூர் இரும்பு பாலத்தில் சிக்கி தவித்த சிறுத்தை.. வனத்துறை பேருதவி.. வீடியோ பாருங்க
நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் இரும்புபாலம் பகுதியில் கம்பி வேலியில் சிக்கி தவித்த சிறுத்தை, வன கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி நேற்று முன்தினம் உயிருடன் மீட்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பில் வைத்து வந்த நிலையில், இன்று அடர்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே இரும்பு பாலம் பகுதியில் நேற்று கருப்பையா என்பவருக்கு சொந்தமாக தேயிலை தோட்டம் இருக்கிறது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கிருந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் வன கால்நடை மருத்துவர்கள் வந்தனர். பின்னர், வன கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி உயிருடன் வனத்துறையினர் மீட்டனர். பின்னர் பந்தலூர் வனச்சராக அலுவலகத்தில் பாதுகாப்பாக கண்காணிப்பில் வைக்கப்பட்டது.
சிறுத்தை நல்ல உடல் நலத்துடன் இருந்ததால் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் படி நேற்று அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. அப்போது கூண்டிலிருந்து வெளியே வந்த சிறுத்தை சீறிப்பாய்ந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது, இதனை வனத்துறையினர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.இதனிடையே கோத்தகிரி அருகே தோட்டத்தில் புலி ஒன்று இறந்து கிடந்தது. இதுபற்றி நீலகிரி வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
#nilgiris பந்தலூர் இரும்புபாலம் பகுதியில் கம்பி வேலியில் சிக்கி தவித்த சிறுத்தை, வன கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி நேற்று முன்தினம் உயிருடன் மீட்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பில் வைத்து , அடர்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. #leopard pic.twitter.com/lFOJVthYc2
— velmurugan (@velmurugantheni) November 14, 2025
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் புலிகள் நடமாட்டம் அரிதாகவே காணப்படும். இந்தநிலையில் நேற்று கீழ்கோத்தகிரி அருகே உள்ள கடசோலை வனப்பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட கிணற்றில் புலி ஒன்று இறந்தது. இதனை கண்காணிப்பு பணிக்கு சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள் கண்டனர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு வேட்டை தடுப்பு காவலர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கீழ் கோத்தகிரி வனச்சரகர் முத்துராஜா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றில் இறந்து கிடந்த புலியின் உடலை மீட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கால்நடை மருத்துவரை அழைத்தனர். அவர் புலியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தார். பின்னர் அதே பகுதியில் புலி எரிக்கப்பட்டது. புலி இறந்ததற்கான காரணம் குறித்து நீலகிரி மாவட்ட வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications