நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலினிடம் சபாஷ்.. கெத்து காட்டும் கலெக்டர் திவ்யா.. கிராமப்புறங்களிலும் தடுப்பூசி.. மாஸ் நீலகிரி

நீலகிரியில் கிராமப்புறங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

ஊட்டி: நகர்ப்புறம் என்றில்லை, கிராமப்புறங்களுக்கும் சேர்த்து, தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கையை நீலகிரி மாவட்டம் முன்னெடுத்துள்ளது.. அதன்படி, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நீலகிரியை பொறுத்தவரை, தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த ஆரம்பம் முதலே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது..

ஒருபக்கம் கேரளா, இன்னொரு பக்கம் கர்நாடகா என 3 மாநில எல்லையில் இந்த மலை மாவட்டம் உள்ளது. அதனால் கொரோனா தடுப்பை ஒழிப்பது என்று மிகப்பெரிய சவாலாக இருக்கிறது..

 நீலகிரி

நீலகிரி

அதுவும் இல்லாமல் நீலகிரியில் நிறைய பழங்குடியினர் வசித்து வருகிறார்கள்.. நிறைய குட்டி குட்டி கிராமங்கள் உள்ளன.. இந்த கிராமங்கள் எல்லாம் தொலை தூரத்தில் உள்ளன.. இங்கு இயல்பாக யாராலும் சென்று வர முடியாது. இப்படிப்பட்ட இடங்களிலும் மக்களை தேடி பிடித்து, தடுப்பூசி செலுத்தும் முயற்சியைதான் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கையில் எடுத்தார்.

 மாவட்டம்

மாவட்டம்

இப்போது, இந்தியாவிலேயே அனைத்து பழங்குடியின மக்களும் வேக்சின் போட்டுக்கொண்ட ஒரே மாவட்டமாக நீலகிரி கெத்து காட்டி உள்ளது.. இந்தியாவில் வேறு எந்த மாவட்டத்திற்கும் இப்படி ஒரு சிறப்பு இல்லை.. இதனால், அப்பகுதி பழங்குடியின மக்கள் பாதுகாப்பதோடு அவர்களின் இனம் நீட்சி அடையவும் வழி ஏற்பட்டுள்ளது... அதுமட்டுமல்ல, திவ்யாவின் இந்த பணியை பாராட்டி, முதல்வர் முக ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து, 2 நாளைக்கு முன்பு சான்றிதழையும் வழங்கினார்.

 தடுப்பூசி

தடுப்பூசி

இப்படிப்ட்ட சூழலில்தான், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி இருப்பு இல்லாமல் போய்விட்டது.. இதனால் யாருக்குமே தடுப்பூசி போட முடியவில்லை. பிறகு, கூடுதலாக கோவிஷீல்டு தடுப்பூசி வரவழைக்கப்பட்டது.. அந்த மருந்துகள் வந்தபிறகே, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டது.

தடுப்பூசி

தடுப்பூசி

நேற்றுதான் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாயக்கூடங்கள், அங்கன்வாடி மையங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முதல் மற்றும் 2-வது டோஸ் செலுத்த பொதுமக்கள் ஆர்வமுடன் மையங்களுக்கு சென்றனர்.. அவர்களது விவரங்கள் எல்லாம் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு, அதன்பிறகு ஊசி போடப்பட்டது..

 ஆர்வம்

ஆர்வம்

அதாவது, நகர்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கும் தொற்று பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.. அந்த வகையில், 35 மையங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது... தடுப்பூசியை செலுத்தி கொள்ள மக்களும் சரி, மாவட்டம் சரி, ஆல் டைம் முனைப்பாக இருந்து வருகிறது.

English summary
Four thousand people vaccinated against coronavirus in Nilgiris District
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X