ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தால்... நீலகிரி எஸ்பி நிஷா சொன்ன முக்கியமான விஷயம்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் நிலவும் அருமையான கால நிலை இருக்கும். கோடைக்காலத்தில் தமிழ்நாட்டில் மிகவும் குளிரான இடமாக ஊட்டி இருக்கும். இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டிக்கு பலரும் படை எடுப்பார்கள். இப்போது பலரும் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள். இந்நிலையில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும் என நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா தெரிவித்தார்.

தமிழ்நாட்டிலேயே இப்போது அதிகமான மக்கள் சுற்றுலா செல்ல விரும்பும் இடம் என்றால் அது இரண்டு இடம் தான்.. ஒன்று ஊட்டி.. இன்னொன்று கொடைக்கானல்.. ஊட்டி என்பது நீலகிரி மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இங்கு ஊட்டி மட்டுமின்றி மாவட்டம் முழுவதுமே காலநிலை அருமையாக இருக்கும். அடிக்கடி மழை பெய்யும். இரவில் குளுகுளுவென இருக்கும்.பகலில் இதமான சாரல் அல்லது பனி விழும். சென்னையில் உள்ள வெயிலுக்கு ஊட்டி சென்றால் இதமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டுமே பள்ளி விடுமுறையின் போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் அதிகமானோர் வந்து செல்கிறார்கள்.. இந்நிலையில் வருகிற மே மாதம் நீலகிரி மாவட்டத்தில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி உள்பட பல்வேறு கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது.

tour ooty Nilgiri

இந்த நிலையில் ஊட்டி நகரில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் போலீசாரின் வசதிக்காக இருக்கை மற்றும் நிழற்குடையுடன் கூடிய தடுப்புகள் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் தடுப்புகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான தடுப்புகள் மற்றும் நிழற்குடைகள் வழங்கப்பட்டன. இவற்றை நீலகிரி மாவட்ட எஸ்பி நிஷா போலீசாரின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி மாவட்ட எஸ்பி நிஷா, தனியார் நிறுவனத்தால் 50 தடுப்புகள் மற்றும் 10 நிழற்குடைகள் நீலகிரி மாவட்ட போக்குவரத்து மேலாண்மைக்காக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிழற்குடைகள் ஊட்டி நகரின் முக்கிய சந்திப்புகளில் அமைக்கப்பட்டு வருகிறது. மழை, வெயில் காலங்களில் பணிபுரியும் போலீசாருக்கு உதவியாக இந்த நிழற்குடைகள் இருக்கும். கோடை சீசன் தொடங்க உள்ளதால், போக்குவரத்து விதிமுறைகளை மக்கள் கடைபிடிப்பதன் பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கோடை கால போக்குவரத்து மேலாண்மைக்காக அனைத்து துறையினருடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இதில் சீசன் சமயத்தில் சுற்று பஸ்கள் இயக்குவது, வாகன நிறுத்துமிட பகுதிகளை கண்டறிவது, ஊட்டி நகரில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படியே னைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்துக்கு வாகனங்கள் வர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் வருவதை பொறுத்து குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்ற முடிவு செய்துள்ளோம்.

மேட்டுப்பாளையம்- குன்னூர் பாதை மே 1-ந் தேதி முதல் ஒரு வழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். கோடை காலத்தில் வாகன நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள போலீசார் போக்குரவத்து மேலாண்மையில் ஈடுபட்டு உள்ளனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில், கூடுதலாக போலீசார் பணியாற்றுவார்கள்" இவ்வாறு நீலகிரி மாவட்ட எஸ்பி நிஷா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+