Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டேபிளில் 'அந்த' வாட்டர் பாட்டில்.. சர்ச்சையில் திமுக அமைச்சர்.. வெளியான போட்டோ.. நடந்தது என்ன?

திமுக அமைச்சர் ராமச்சந்திரன் மீது சர்ச்சை புகார் ஒன்று கிளம்பி உள்ளது

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: புதிய சர்ச்சை ஒன்றில் திமுக சீனியர் அமைச்சர் ஒருவர் சிக்கி உள்ளார்.. இதை மாவட்ட மக்களும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர் என்றாலும், அமைச்சர் தரப்பில், பரவி வரும் சர்ச்சைக்கு தெளிவான விளக்கமும் தரப்பட்டுள்ளது.

கடந்த 15 வருடங்களுக்கு முன்பிருந்தே நீலகிரியை எடுத்து கொண்டால், பிளாஸ்டிக் என்றாலே மாவட்ட நிர்வாகம் கண்டிப்பு காட்டும்.. சுற்றுலா பயணிகளையும் பிளாஸ்டிக் கொண்டு வர வேண்டாம் என்று சலிக்காமல் வேண்டுகோள் விடுத்து கொண்டே இருக்கும்.

பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான ஓர் அறப்போராட்டத்தை தொடங்கியவர் அன்று நீலகிரி கலெக்டராக இருந்த சுப்ரியா சாஹூ. அடுத்தடுத்து வந்த கலெக்டர்களும் இதனை விடாமல் கடைபிடித்து வருகின்றனர்.

 மாவட்ட நிர்வாகம்

மாவட்ட நிர்வாகம்

அன்று, சுப்ரியா சாஹு தொடங்கி இன்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரை பிளாஸ்டிக்குக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறார்கள். ஆனால், 2 வருடங்களுக்கு முன்பு, மாவட்ட மக்கள் இதற்கு உதவி புரிந்தாலும் சுற்றுலா பயணிகள் சிலர் ஒத்துழைப்பு தராமல் இருந்தனர்.. ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்கள் தண்ணீரை பயன்படுத்தினர்..

நீலகிரி

நீலகிரி

அந்த பாட்டிலை ஆங்காங்கே வீசிவிட்டும் சென்றனர்.. அந்த பிளாஸ்டிக் பாட்டிலும் நீலகிரியில் எங்கும் தென்படக்கூடாது என்பதால்தான், அந்த வருட சுதந்திர தினம் முதல், ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் ஆகியவைகளை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இப்போது வரை அந்த தடை நீடிக்கிறது..

 பிளாஸ்டிக் பாட்டில்

பிளாஸ்டிக் பாட்டில்

அதற்கு பதிலாக, பொதுவெளிகளில் மக்களின் குடிநீர் தேவைக்காக பல இடங்களில் வாட்டர் ஏடிஎம்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஒருவேளை யாராவது பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்பனை செய்தாலோ, அல்லது வெளியூர் மக்கள் கொண்டு வந்தாலோ, அவர்களுக்கு அபராதம் போடுகிறது. துணிமணிகள், காய்கறி, சிக்கன், மட்டன் என எது வாங்கினாலும், ஒரு பேப்பரில் சுற்றி கொடுப்பதுதான் நீலகிரியில் வழக்கம்...

 மாவட்ட நிர்வாகம்

மாவட்ட நிர்வாகம்

இன்றுவரை பிளாஸ்டிக் ஒழிப்பதில், மாவட்ட மக்களும் நன்றாக ஒத்துழைப்பு தந்து வருகின்றனர்.. இப்போதுவரை பிளாஸ்டிக் இல்லா மாவட்டத்தில் நீலகிரி முதன்மையாக திகழ்ந்து வருகிறது.. தொடர்ந்து சுற்றுசூழலை பாதுகாக்கும் முயற்சியிலும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, நாட்டின் முதல் உயிர்ச்சூழல் மண்டலமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட நீலகிரி‌‌ மலைகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது..

 புது சர்ச்சை

புது சர்ச்சை

இப்படிப்பட்ட சூழலில் அந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சரே, அதுவும் திமுகவின் சீனியர் அமைச்சரே, அதுவும் சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டிய அமைச்சரே, விதிமுறைகளை மீறி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.. கூடலூரில் ஒரு நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றார்.. அப்போது அவர் முன்பிருந்த டேபிளில் 2 பிளாஸ்டிக் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன.. இது சம்பந்தமான போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின.. இதை பார்த்ததும் நீலகிரி மக்கள் கொந்தளித்துள்ளனர்.

 வைரல் போட்டோக்கள்

வைரல் போட்டோக்கள்

முக்கியமாக, சூழலியல் செயற்பாட்டாளர்களும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்புதான், கூடலூர் நாடுகாணி பகுதியில் நடந்த வன உயிரின வார விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.. அதற்குள் எப்படி பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை அனுமதிக்க முடிகிறது? எல்லாரையும் விட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முன்னோடியாக இவர்தானே இருக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

விளக்கம்

விளக்கம்

ஆனால், பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரை தாங்கள் பயன்படுத்தவில்லை என்றும், வேறு எங்கேயும் கையோடு அந்த பாட்டிலை எடுத்து செல்லவும் இல்லை, இப்படி எங்கேயும் மாவட்டத்தில் பயன்படுத்தியதுமில்லை என்றும், அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள், டேபிளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை வைத்திருக்கிறார்கள்" என்று வனத்துறை அமைச்சர் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+