கொடநாடு கொலை வழக்கு.. கனகராஜ் சகோதரர் தனபால் ஜாமீன் மனு தள்ளுபடி.. தீவிர விசாரணை
ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு கூடலூர் கிளை சிறையில் உள்ள கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை சதி திட்டம் குறித்து இவர்கள் இருவருக்கும் தெரிந்திருந்தும் போலீஸ் விசாரணையின் போது மறைத்ததாலும், கனகராஜின் செல்போன் பதிவுகளை அழித்ததாலும் இருவரையும் கடந்த மாதம் 25-ந்தேதி தனிபடை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2ம் தேதி இருவரும் ஜாமீன் கோரி உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது.

சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு
ஆனால், தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கினால் மற்ற சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும் இது வரை கனகராஜின் வீட்டில் இருந்து 3 செல்போன்கள் மற்றும் 6 சிம்கார்டுகளை கைப்பற்றபட்டு இருப்பதால், மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் ஜாமீன் வழங்க கூடாது என்று அரசு தரப்பில் வாதிடபட்டது.

தள்ளுபடி
மேலும் கோடநாடு கொலை கொள்ளை காரணமாக, தனபால் மற்றும் ரமேஷை போல மேலும் சிலரை விசாரிக்க வேண்டி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து தனபால் மற்றும் ரமேஷின் ஜாமீன் மனுவை மாவட்ட நீதிபதி சஞ்ஜை பாபா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

புதிய தகவல்
இதனிடையே, போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் புதிய தகவல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடநாடு கொள்ளை முடிந்ததும் சேலத்துக்கு வந்த கனகராஜுக்கு ரமேஷம் தனபாலும் சேர்ந்து புதிய செல்ஃபோனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த செல்ஃபோனை கனகராஜின் மரணத்திற்குப் பிறகு ரமேஷ் வைத்திருந்துள்ளார் என்றும் அதைப் போலீசார் கைப்பற்றியிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

செல்போன்
கொடநாடு கொள்ளை நடந்தபிறகு புதிய செல்போனில் கனகராஜ் யாரையெல்லாம் தொடர்புகொண்டுள்ளார் என்ற எலக்ட்ரானிக் தகவல்களைப் போலீசார் திரட்டி, அதை வைத்தும் ரமேஷிடம் விசாரணையை நீட்டித்து வருவதாக கூறப்படுகிறது.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications