சயான் கிளப்பிய புது பூகம்பம்.. என்னிடம் பறிமுதல் செய்த செல்போன்கள் எங்கே? கேள்வியால் திணறிய போலீஸார்
ஊட்டி: தன்னிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்களை நீதிமன்றத்திலும் ஒப்படைக்கவில்லை, தன்னிடமும் தரவில்லை, எனவே எங்கே கொடுத்தீர்கள் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் உதகை நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வாளையாறு மனோஜூக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளை சிறையில் உள்ளார்.

திருப்புமுனை
இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர். இவர்களிடம் மேற் கொண்ட விசாரணை அறிக்கையை, கோடநாடு வழக்கு விசாரணையின் போது தாக்கல் செய்யப்படும் என போலீஸார் தெரிவித்தனர். இதனால், அனைவரும் இந்த வழக்கு விசாரணைக்காக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

சயான் ஆஜர்
இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான் மட்டுமே ஆஜராகியிருந்தார். வாளையாறு மனோஜை போலீஸார் ஆஜர்படுத்தவில்லை. அரசு தரப்பில் சிறப்பு வழக்கிறஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆஜராகினர். அதிமுக சார்பில் வழக்கறிஞர்கள் ஆனந்தகிருஷ்ணன், டி.கே.தேவராஜ், என்.சுரேஷ்குமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆஜராகினர்.

பரபரத்த நீதிமன்றம்
சயான் இதற்கு முன்பு போலீசார் நடத்திய விசாரணையின் போது அதிமுகவை சேர்ந்த ஒரு முக்கிய புள்ளி இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பதாக தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனவே நீதிமன்ற வளாகத்தில் தேசிய ஊடகங்களில் இருந்து கூட நிருபர்கள் வந்திருந்தனர். உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு விசாரணையை காரணம் காட்டி செப்டம்பர் 2ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த சயான் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அங்கிருந்த நிருபர்களால்,பார்க்கமுடிந்தது.

சயான் வாக்குவாதம்
எனவே என்ன நடக்கிறது என்றே ஓடிச்சென்று அருகே சென்று கேட்டனர். அப்போது தனது செல்போன்களை திருப்பி தரக்கோரி காவல்துறை டிஎஸ்பி சுரேஷிடம் சயான் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதகை மாவட்ட டிஎஸ்பி சுரேஷ் தான் இப்போது இந்த வழக்கு விசாரணையை செய்து வருகிறார் .எனவே அவரிடமே நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சயான்.
Recommended Video

3 செல்போன்கள் எங்கே
2017 மற்றும் 2019 ஆம் ஆண்டு ஒரு ஐ-போன் மற்றும் 2 ஆண்ட்ராய்டு செல்போன்களை காவல்துறையினர் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்ததாக அவர் அப்போது தெரிவித்தார். அந்த மூன்று சிம் கார்டுகள் மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று டிஎஸ்பியை பார்த்து கேள்வி எழுப்பினார் சயான். அப்போது கூட இருந்த பிற போலீசார், "சும்மா இருப்பா.. என்று, அமைதியாக இருங்கள்.." என்று சயானை பார்த்து கையசைத்தனர். இருப்பினும் காவல் துறையினர் நேரடியாக எந்த பதிலையும் அவரிடம் சொல்லவில்லை.

முக்கிய ஆதாரங்கள் மிஸ்சிங்
விடாத சயான்.. 2ம் தேதி விசாரணைக்கு வரும்போது செல்போன் பற்றி தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு டிஎஸ்பி சுரேஷ்.. நீதிமன்றத்தில் நாங்கள் தெரிவிப்போம் என்று கூறிவிட்டு சென்றார். காவல்துறையால் கைப்பற்றப்பட்ட அந்த செல்போனில் பல புகைப்பட ஆதாரங்கள் உள்ளன, மேலும் யார் யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற விவரங்களும் அந்த சிம் கார்டு மூலமாக காவல்துறை கைகளுக்கு சிக்கியிருக்கும். இப்படியான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லையே ஏன், என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது. இந்த செல்போன்கள் கடந்த ஆட்சிக் காலத்தின் போது காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுகுறித்த விபரம் இப்போதுவரை வெளியிடப்படாமல் இருந்துள்ளது. இன்று நீதிமன்ற வளாகத்தில் சயான் இந்த விவகாரத்தை கிளப்பியதால், புதியதாக ஒரு பூதம் வெடித்துக் கிளம்பியுள்ளது. கோடநாடு வழக்கில் இந்த விவகாரம் திருப்பங்களை ஏற்படுத்துமா என்பதை அடுத்தடுத்த விசாரணைகளில் பார்க்க வேண்டியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications