தாசில்தார் குன்னூரில் கிளம்பிட்டாரு.. அதெப்படி ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள்? நீலகிரியில் பரபர ஆய்வு
ஊட்டி: பீகார் மாநிலத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் பல்வேறு அதிர்வலைகளை உண்டுபண்ணி வருகிறது. கிட்டத்தட்ட 65 லட்சம் மக்கள் வாக்குரிமையை இழந்து நிற்கும் நிலை உள்ளதாகவும், இதற்கு உரிய விளக்கம் தேர்தல் ஆணையம் தர மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.. அதேபோல தமிழகத்திலும் வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக திமுக சுட்டிக்காட்டி வரும் நிலையில், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டில் 79 பேர் இடம் பெற்றுள்ளதாக பதிவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. என்ன நடக்கிறது நீலகிரி மாவட்டத்தில்?
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழகத்திலும் வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்று திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது மிகுந்த அதிர்வலையை உண்டு பண்ணி வருகிறது.
மனோகரன் போட்ட மனு
இது குறித்து சமூக ஆர்வலரும் ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியருமான மனோகரன், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடந்த வாரம் மனு ஒன்றை அனுப்பியிருந்தார்..
அந்த மனுவில், "நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம் கோடேரி சிற்றூர், குன்னூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்டது. பாகம் எண் 210, வாக்குச்சாவடி எண் 210.
இந்த பகுதிக்கான வாக்காளர் பட்டியல் கடந்த 6.01.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்தபோது வார்டு எண் 11,12,17 ஆகியவை இந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்டவை என குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் 9,10 வார்டுகளின் வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
நீலகிரியில் வாக்கு திருட்டு
தற்போது இந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்டவை வார்டு எண் 12 மற்றும் 17 மட்டுமே. வீட்டு எண் 10ல் 9 பேர், வீட்டு எண் 9ல் 14 பேர், வீட்டு எண் 11ல் 79பேர், வீட்டு எண் 12ல் 33 பேர் பெயர்கள் உள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாக்காளர் பெயர்கள் பல பகுதிகளில் சிதறிக் காணப்படுகின்றன. இப்பகுதியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிவிட்ட பலரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு குறைகள் உள்ள வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு வாக்குகள் திருடப்படுகின்றன என்று அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருவதை அறிகிறோம். எனவே இந்த வாக்குச்சாவடியிலும் வாக்கு திருட்டு நடந்துள்ளதா? அவ்வாறு நடந்து இருந்தால் யார் அதனை செய்திருப்பார்கள்? என்று கண்டறிய வேண்டும்.
குன்னூர் வாக்காளர் பட்டியல்
மேலும் 818 வாக்காளர்கள் உள்ள ஒரு சிறிய பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் இவ்வளவு குளறுபடிகள் இருப்பதால் மாவட்டம் முழுவதும் எவ்வளவு குளறுபடிகள் இருக்கும் என்ற சந்தேகம் எழுகிறது.
வாக்காளர் பட்டியலில் இவ்வளவு குளறுபடிகள் இருப்பது தேர்தல் அலுவலர்களின் அலட்சியமா? அல்லது தரவுகள் பதிவேற்றும் போது ஏற்படும் கவனக்குறைவா? என்பதை கண்டறிய வேண்டும். எதிர் வரும் தேர்தலுக்கு முன்பாக இத்தகைய குறைகளற்ற வாக்காளர் பட்டியல் வெளியிடவேண்டும்" என்று மனோகரன் கேட்டுக் கொண்டிருந்தார்.
தாசில்தார் ஜவஹர் அதிரடி
இந்நிலையில், குன்னூர்: குன்னூர் கோடேரி கிராமத்தில் ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்காளர்கள் உள்ளதாக வந்த தகவலை அடுத்து, வட்டாட்சியர் உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்..
குன்னூர் வட்டாட்சியர் ஜவகர் தலைமையில் அதிகாரிகள் கோடேரி கிராமத்தில் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.. குன்னூர் தாசில்தார் ஜவகர் இதை பற்றி சொல்லும்போது, "இங்குள்ள வாக்காளர் லிஸ்ட் ஆய்வு செய்து, அதிலுள்ள குழப்பங்களை தீர்க்கும் வகையில், ஃபார்ம்-8-ல் விண்ணப்பித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குளறுபடிகள், அலட்சியம், கவனக்குறைவு
அதேபோல இதுகுறித்து மனுதாரர் மனோகரன் சொல்லும்போது, "இப்படியொரு வாக்காளர் லிஸ்ட்டை வைத்து கொண்டு, அரசியல் கட்சியினர் குறை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.. இந்த குளறுபடிகள் தேர்தல் அலுவலர்களின் அலட்சியமா? தரவுகள் பதிவேற்றும்போது ஏற்படும் கவனக்குறைவா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். டேட்டா பதிவுகளில் உள்ள தவறுகளையும் சரி செய்ய வேண்டும். இதுகுறித்தும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications