உடல் அலர்ஜியால் அதிமுக கவுன்சிலர் மகன் தற்கொலை.. ஜிம்மில் வழங்கிய புரோட்டீன் பவுடர் காரணமா?
நீலகிரி: குன்னுார் அதிமுக கவுன்சிலர் மகனின் உடலில் அலர்ஜி ஏற்பட்டு கடும் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜிம்மில் வழங்கிய புரோட்டீன் பவுடர் எடுத்ததால் உடல் அலர்ஜி ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அட்டடி பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. அதிமுக சார்பில் குன்னூர் நகர் மன்ற கவுன்சிலராக இருக்கிறார். இவரது இளைய மகன் ராஜேஷ் கண்ணா (17), கோத்தகிரி தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம், 31 ஆம் தேதி இவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

வயிற்று பகுதியில், 50 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ராஜேஷ் கண்ணா. இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
உடற்பயிற்சிக் கூடத்தில் வழங்கப்பட்ட புரோட்டின் பவுடர் காரணத்தால் உடலில் அலர்ஜி ஏற்பட்டு மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நேற்று அப்பர் குன்னுார் போலீஸ் ஸ்டேஷனில், உறவினர்கள் மற்றும் பாஜக, அதிமுக கட்சியினர் திரண்டனர்.
டிஎஸ்பி ரவி, இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். புரோட்டீன் பயன்படுத்தியதால் தான், மாணவரின் உடலில் தோல் அலர்ஜி ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களிடம் விசாரிக்கப்படும். இந்த புரோட்டின் எடுத்த மற்றவர்களுக்கும் பாதிப்பு உள்ளதா? இவர் கூடுதலாக எடுத்துள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். அதன் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
குருமூர்த்தியின் சகோதரர் பாலகங்காதரன் கூறுகையில், "ராஜேஷ் கண்ணா, 2023 ஆம் ஆண்டில் இருந்து மவுன்ட் ரோட்டில் உள்ள ஜிம்மில் பயிற்சிக்கு சென்று வந்தார். ஜிம்மில் கொடுத்த ஸ்டீராய்டு புரோட்டின் பவுடர் காரணத்தால், உடலில் அலர்ஜி ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்தார். சம்பந்தப்பட்ட ஜிம் பயிற்சி மைய உரிமையாளர் தான், தனது தற்கொலைக்கு காரணம் என, ராஜேஷ் கண்ணா கடிதம் எழுதி வைத்ததால், சம்பந்தப்பட்ட ஜிம் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications