ஊட்டியில் பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க்.. தமிழகத்திலேயே முதல்முறை!.. சபாஷ்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழகத்திலேயே முதல்முறையாக பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், காட்டு நாயக்கர், பயனியர் போன்ற ஆறு வகையான பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவருமே விவசாயம் மற்றும் குடிசைத் தொழிலை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

வாழ்வாதாரம்
இந்நிலையில் பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி பழங்குடியின ஆராய்ச்சி மையம் மூலம் தமிழகத்திலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள எம்.பாலடா பகுதியில் பழங்குடியின பெண்கள் மட்டுமே நடத்தும் பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டது.

12 பேர்
இதில் ஒவ்வொரு பழங்குடியின வகுப்பில் இருந்தும் இரண்டு பேர் என மொத்தம் பன்னிரண்டு பேர் சுழற்சி முறையில் 8 மணி நேரமாக பிரித்து பணி செய்து வருகின்றனர். இந்த பெட்ரோல் பங்க் ஊராட்சி ஒன்றிய பகுதியில் இருப்பதால் நகர்புறத்தை விட பெட்ரோல் 87 பைசாவும், டீசல் 60 பைசாவும் குறைவாக உள்ளது.

பழங்குடியின நலத் துறை
இதனால் எம்.பாலடா பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன் பெறுகின்றனர். இது குறித்து பழங்குடியின ஆராய்ச்சி மையத்தினர் கூறுகையில் மத்திய பழங்குடியின அமைச்சகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இத்திட்டம் தொடங்கப்பட்டு பழங்குடியின பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் தொடங்கப்பட்டது.

ஊதியம்
இதன் மூலம் ஈட்டும் வருமானம் ஊதியம் போக மீதி ஆறு வகையான பழங்குடியின மக்களின் மேம்பாட்டு நலனிற்காக பயன்படுத்தப்படும் என்கிறனர். இது போல் பெண்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ள இது போன்ற பல நல்ல திட்டங்களை தமிழகம் முழுவதும் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications