உதகை : தோடர் பழங்குடியினருடன் இணைந்து இசைக்கு ஏற்ப அசத்தலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடனம்!
உதகமண்டலம்: உதகமண்டலம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்மண்ணின் பூர்வகுடிகளாக தோடர் பழங்குடியினர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த வரவேற்பின் போது தோடர்களுடன் இணைந்து அவர்களது பாரம்பரிய இசைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் நடனமாடினார்

உதகமண்டலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். உதகையில் நாளை காலை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். உதகையின் 200-வது ஆண்டை முன்னிட்டு வெளி உலகத்துக்கு இந்த சுற்றுலா நகரை அறிமுகம் செய்த ஜான் சலிவன் உருவ சிலையை நாளை மறுநாள் முதல்வர் திறந்து வைக்கிறார். பின்னர் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.

இதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகை சென்றார் முதல்வர். அவர் சென்ற வழியெங்கும் பொதுமக்களும் திமுகவினரும் பெரும் எண்ணிக்கையில் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், உதகையில் கேட்ட குரல்: "நல்லா இருக்கீங்களா?, உடம்ப பாத்துக்கோங்க! ஆட்சி சூப்பர்!' அதிலும் ஒரு பெண்,"நான் கருவுற்று இருக்கேன், என்னை வாழ்த்துங்க" - கேட்டபோது உருகினேன்! என்றும் மக்களிடம் செல்! மக்களோடு வாழ்! என பதிவிட்டிருந்தார்.

குன்னூரில் இருந்து உதகை சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மந்து என்ற இடத்தில் தோடர் பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பெரும் எண்ணிக்கையில் பாரம்பரிய உடைகளுடன் தோடர் பூர்வகுடிகள் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர்.

அப்போது தோடர் பழங்குடியின மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய இசைக்கு ஏற்றபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் நடனமாடினார். முதல்வர் தங்களுடன் இணைந்து நடனமாடியதற்கு தோடர் பூர்வகுடிகள் நன்றி தெரிவித்தனர்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications