குன்னூரில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி.. மிகுந்த வேதனை அடைந்தேன்.. அண்ணாமலை இரங்கல்
நீலகிரி: குன்னூர் அருகே மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர். இந்த நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் பதிவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து 59 பயணிகளுடன் பேருந்து ஒன்று வந்துள்ளது. ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு இன்று 30.09.2023 மாலை பேருந்தில் சுற்றுலா பயணிகள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அப்போது குன்னூர் -மேட்டுப்பாளையம் மரப்பாலம் அருகே வளைவில் திரும்பும் போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதனால் பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்தது. சுமார் 50 அடி பள்ளத்தில் பஸ் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் பஸ்சில் சிக்கி தவித்தவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது நடந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை இரங்கல் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை ட்விட் வெளியிட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ஆம்புலன்ஸ்கள் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications