நீலகிரியில் போட்டியா? செங்கோட்டையன் கொடுத்த ரீப்ளே.. குஷியான தவெக தொண்டர்கள்
நீலகிரி: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையன் வழக்கம் போல் கோபிசெட்டிபாளையத்தில் களமிறங்குவாரா? அல்லது இந்த முறை வேறு தொகுதியில் களம் காணுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கட்சிப் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். கூட்டணியை பலப்படுத்துவது, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு செய்வது உள்ளிட்ட வேலைகளை தீவிரமாக செய்ய தொடங்கியுள்ளன.

தவெகவில் செங்கோட்டையன்
இந்த முறை களத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இணைந்துள்ளது. தவெகவும் கட்சியைப் பலப்படுத்துவது, கூட்டணிக்கு கட்சிகளை இணைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. முன்னாள் தலைவர்கள் பலர் விஜய்யின் தவெகவில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த நவம்பர் மாதம் விஜய்யுடன் இணைந்தார்.
விஜய் செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும், கொங்கு மண்டல அமைப்பாளர் பொறுப்பையும் அளித்தார். இதனால் கொங்கு மண்டலத்தில் தவெகவின் முக்கிய முகமாக மாறியுள்ளார் செங்கோட்டையன். செங்கோட்டையன் வந்தது தவெகவிற்கு பலமாகவே பார்க்கப்படுகிறது. இதேபோன்று ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தை செங்கோட்டையன் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
நீலகிரியில் போட்டியா?
தொடர்ந்து விஜய் தான் முதல்வர் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்றும், அவர் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் என்றும் பேசி வருகிறார். கொங்கு மண்டலத்தில் முக்கிய முகமாக பார்க்கப்படும் செங்கோட்டையன், கோபி செட்டி பாளையத்தில் 8 முறை எம்.எல்.ஏவாக தேர்வாகியுள்ளார்.
வரும் தேர்தலிலும் வழக்கம் போல் கோபி செட்டி பாளையத்தில் களமிறங்குவாரா? அல்லது இந்த முறை வேறு தொகுதியில் களம் காணுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் தான் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம் நீலகிரி மாவட்டத்தில் நீங்கள் போட்டியிடுவீர்களா? எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
தவெகவினர் உற்சாகம்
அவர் கூறியதாவது, "நீலகிரியில் உள்ள 3 சட்டமன்றத் தொகுதியினை பொறுத்தவரையிலும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் சட்டமன்ற உறுப்பினர்" என்று கூறினார். அப்போது அங்கிருந்த தவெகவினர் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். படுகர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வழிபடும் ஆலயத்திற்கு இன்று செங்கோட்டையன் வருகை தந்தார். அப்போது அவர் நிர்வாகிகளுடன் ஆலயத்தில் வழிபட்டார். தொடர்ந்து அவர் அங்கிருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
ஏற்கனவே அதிமுக மாஜிக்களை தவெக பக்கம் கொண்டு வரும் முயற்சியில் செங்கோட்டையன் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை தவெக கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தும் பணியும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருப்பூர், கோபிசெட்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செங்கோட்டையன் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
-
நான் வருவேன்.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. சுணங்கி கிடந்த தவெக தலைகளுக்கு.. சர்ப்ரைஸ் தகவல்! -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை! -
இனி எனக்கு எல்லாமே அரசியல் தான்.. தவெக வேட்பாளர்கள் நேர்காணலில் ஓபனாக பேசிய விஜய் -
இருந்ததும் போச்சே! தவெக கூட்டணியில் இருந்து முஸ்லீம் கட்சி கிரேட் எஸ்கேப்! அதிர்ச்சியில் விஜய் -
“10 வருட உழைப்பிற்கு பலன் இல்லை.. பணம் வாங்கிக்கொண்டு பதவி”.. சென்னை தவெக மா.செ மீது குற்றச்சாட்டு! -
பனையூரில் 60 நிர்வாகிகளுக்கு டேட்டாவுடன் கவர் கொடுத்த தவெக.. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்? -
நேரில் வாங்க! கரூர் கேசில் விஜய்க்கு சிபிஐ சம்மன்! நாளை மீண்டும் விசாரணை! காட்டிக்கொடுத்த போன் கால் -
பாஜக வந்துடுங்க.. பவன் கல்யாண் போட்ட ‘வாட்ஸ்அப்’ கால்.. விஜய்யை மிரட்டும் ‘சிரஞ்சீவி’ சென்டிமெண்ட் -
45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட் -
TVK Vijay: மக்கள் சந்திப்புக்கு தடையா.. விஜய் அதிரடி முடிவு.. மார்ச் 12 தவெக செய்ய போகும் சம்பவம் -
கரூர் வழக்கு.. டெல்லிக்கு கூப்பிடும் சிபிஐ! விஜய் ஆஜராவது சந்தேகம்தான்












Click it and Unblock the Notifications