ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ்.. கருப்பு சட்டையுடன் கமல்ஹாசன்.. பல விஐபிகள் பங்கேற்பு
சென்னை: அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிமையான பதவியேற்பு விழாவில் பதவி ஏற்றது.
பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஓ.பன்னீர் செல்வம்
அதிமுக தரப்பில் இருந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. அதே நேரம் அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்று உள்ளார். கருணாநிதி முதல்வராக பதவியேற்க காலகட்டங்களில் ஜெயலலிதா, அதேபோல ஜெயலலிதா பதவியேற்றபோது, கருணாநிதி ஆகியோர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றது கிடையாது.

அரசியல் நாகரீகம்
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றபோது, ஸ்டாலின் அந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார் . தற்போது ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் அந்தஸ்தில் இருக்கும் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

கமல்ஹாசன் பங்கேற்பு
இதேபோல முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்ற விஐபிகளாகும். கருப்பு சட்டை அணிந்தவாறு இந்த விழாவில் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார் என்பது கவனிக்கத்தக்க அம்சமாக இருந்தது. தன்னை எப்போதுமே கடவுள் மறுப்பாளர் என்று சொல்லிக் கொள்பவர் கமலஹாசன். எனவே தான் அவர் கருப்பு சட்டை அணிந்து உள்ளார் இதில் வேறு சிறப்புக் காரணம் கிடையாது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

எளிமையான விழா
ஸ்டாலின் பதவி ஏற்பு விழா மிக எளிமையாக நடைபெற்றது. துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரும் இதில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் சுமார் 500 பேர் மட்டும்தான் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் திமுக தொண்டர்கள் யாரும் வருகை தர வேண்டாம் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications