பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிளாக் லிஸ்டில் இருந்து எஸ்கேப்பான பாக்... பாரீஸ் கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு

Google Oneindia Tamil News

பாரீஸ்:பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கைக்கு கடிவாளம் போடும் வகையில், பாரீசில் நிதி நடவடிக்கை பணிக் கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் பணியில் இந்தியா மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.

All eyes on fatf today as india pushes for pakistan to be blacklisted

அதுதவிர, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இயங்கி வருகிற எப்ஏடிஎப் என்னும் நிதி நடவடிக்கை பணிக்குழுவை இந்தியா நாடியுள்ளது. அந்த குழுவிடம் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்குமாறு இந்தியா வலியுறுத்தி உள்ளது.

காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய கார் குண்டு வெடிப்பில், பாகிஸ்தான் அரசு அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறி ஆவணத்தை எப்ஏடிஎப் என்னும் நிதி நடவடிக்கை பணிக்குழுவிடம் இந்தியா அளித்துள்ளது.

ஒரு வார காலமாக நடைபெற்று வரும் இந்த கூட்டம் தற்போது முடிவு அடைந்துள்ளது. கூட்டத்தில், இந்தியாவின் கோரிக்கை குறித்து விவாதிக்கப் பட்டது.

ஏற்கனவே கிரே லிஸ்ட் பட்டியலில் பாகிஸ்தான் நாடு இடம்பெற்றுள்ளது. வரும் அக்டோபர் மாதம் வரை அந்த பட்டியலில் பாகிஸ்தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் அந்த கெடு முடிய.. 7 மாதங்கள் இருப்பதால்... தற்போது கருப்பு பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க முடியாது என்று நிதி நடவடிக்கை பணிக்குழு அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டுள்ளது.

அதே வேளையில், கிரே லிஸ்டில் இருப்பதற்கான காலக்கெடு முடியவில்லை என்று பாகிஸ்தான் கூறியதை நிதி நடவடிக்கை பணிக்குழு ஏற்றுக் கொண்டு இருக்கிறது. நிதி நடவடிக்கை பணிக்குழுவின் இந்த முடிவு, இந்தியாவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச அளவில் நிதி நடவடிக்கை பணிக்குழு என்ற அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. தீவிரவாதத்தை எந்த நாடு ஆதரக்கிறதோ, அந்த நாடுகளுக்கு உலக நிறுவனங்கள் கடன் வழங்குவதை ரத்து செய்து விடும். தீவிரவாதத்தை கண்காணிக்கும் அமைப்புகளில் ஒன்றாக இந்த எப்ஏடிஎப் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
All Eyes on FATF Today as India Pushes for Pakistan to be Blacklisted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X