பிரான்ஸில் கம்பீரமாக நிற்கும் "ஐஎன்எஸ் சென்னை.." பிரதமர் மோடியுடன் சென்ற முப்படை டீம்.. என்ன காரணம்
பாரீஸ்: பிரதமர் நரேந்திர மோடி இப்போது பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில், நமது முப்படைகளைக் கொண்ட ஒரு குழுவும் அங்கே சென்றுள்ளது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் தான் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கே அதிபர் பைடன்- மோடி இடையே சந்திப்பு நடந்த நிலையில், பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி இப்போது பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கே அவருடன் முப்படைகளைக் கொண்ட ஒரு குழுவும் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎன்எஸ் சென்னை: இந்தியக் கடற்படை மூலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட வழிகாட்டும் ஏவுகணை அழிப்புக் கப்பல் "ஐஎன்எஸ் சென்னை". பிரதமர் நரேந்திர மோடி இப்போது பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில், இந்த ஐஎன்எஸ் சென்னை கப்பலும் இப்போது பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளது. பிரான்சில் பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் பங்கேற்க ஐஎன்எஸ் சென்னை இப்போது பிரான்ஸிற்கு சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரான்ஸில் நடைபெறும் இந்த பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் இந்தியாவின் முப்படை சார்பிலும் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தியக் கடற்படை மூலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல் ஐஎன்எஸ் சென்னை, பிரெஸ்டில் உள்ள பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரான்சின் பிரெஸ்ட் என்ற இடத்திற்கு இப்போது சென்றுள்ளது" என்றார்.

பாஸ்டில் தின கொண்டாட்டம்: பிரான்ஸ் நாட்டில் நாளை ஜூலை 14ஆம் தேதி பாஸ்டில் தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் முப்படைகளைச் சேர்ந்த ஒரு ராணுவக் குழு பங்கேற்கும். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு நீண்ட காலமாகவே நல்ல ஒரு நட்பு இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாகவே முப்படை குழு இந்த பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளது. பிரதமர் மோடி இப்போது பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

பிரதமர் மோடி: அது மட்டுமின்றி அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும் மோடி கலந்துரையாட உள்ளார். பிரதமரின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அமைகிறது. இதற்காகப் பிரதமர் மோடி அங்குள்ள பல்வேறு நிறுவன சிஇஓ-களையும் சந்தித்துப் பேச உள்ளார். அங்குள்ள புகழ்பெற்ற லா சீன் மியூசிகேல என்ற இடத்தில் பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் அங்குள்ள இந்தியர்களிடையே பேச உள்ளார்.
பிரதமர் மோடி அங்குச் செல்லும் முன்பு, "நமஸ்தே பிரான்ஸ்" உட்படப் பல நிகழ்ச்சிகளை இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.. பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் தொழில்நுட்பம், விண்வெளி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, ஆற்றல், காலநிலை மாற்றம், விளையாட்டு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications