பாஜகவின் செயல்பாடுகளுக்கும் இந்து மதத்திற்கும் தொடர்பே இல்லை- பாரிசில் சரமாரியாக பேசிய ராகுல் காந்தி
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்தியில் ஆளும் பாஜகவையும் அதன் கொள்கைகளையும் சரமாரியாக தாக்கி பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள INALCO பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, இந்தியாவின் அரசியல் நிலவரம், பாஜகவின் செயல்பாடுகள் ஆகியவற்றை கடுமையாக சாடி பேசினார். ராகுல் காந்தி பேசியதாவது:-

இந்தியாவில் ஆளும் அரசு அதிகாரத்திற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறது. 40 வருடங்களில் இல்லாத வகையில் வேலையின்மை விகிதம் மிக அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்து என்று பாஜக சொல்லும் எவையும் உண்மையில் இந்து மதத்தில் இல்லை. தங்களை விட பலவீனமானவர்களை துன்புறுத்த வேண்டும் என இந்து மதத்தில் சொல்லப்படவில்லை.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் செயல்பாடுகளுக்கும் இந்து மதத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. கீதையை நான் படித்து விட்டேன். என்னிடம் பல உபநிடதங்கள் உள்ளன. பல இந்து புத்தகங்களை படித்து விட்டேன். நாட்டில் மிகப்பெரிய அளவில் சமத்துவமின்மை நிலவுகிறது.
ஆட்சி அதிகாரம் பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு எந்த இடமும் வழங்கப்படுவதில்லை. பட்டியலினத்தோர், ஒபிசி, சிறுபான்மை, பழங்குடியினர் ஒடுக்கப்படுகின்றனர். எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என நினைக்கின்றனர். நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும். என்று கூறினார்.
தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல் காந்தி கூறியதாவது:- நாட்டில் 60 சதவீத மக்கள் எதிர்க்கட்சிகளுக்குதான் வாக்களித்து இருக்கிறார்கள். வெறும் 40 சதவீதத்தினர் மட்டுமே ஆளும் அரசுக்கு வாக்களித்துள்ளனர். எனவே பெரும்பான்மை சமூகம் பாஜகவிற்கு வாக்களித்தது என்ற சிந்தனை தவறானது. பெரும்பான்மை சமூகம் உண்மையில் பாஜகவை விட எங்களுக்கே அதிக வாக்குகளை அளித்துள்ளது.
இந்தியா - பாரத் விவகாரத்தை பொறுத்தவரை அரசியல் அமைப்பில் இந்தியா, பாரத் என இரண்டுமே உள்ளது. மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா அதாவது பாரதம் என இடம் பெற்றுள்ளது. எனவே, இந்த மாநிலங்கள் ஒருங்கிணைந்து இந்தியா அல்லது பாரதத்தை அமைத்துக் கொள்ளலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால் அனைத்து மாநிலங்களின் குரல்களையும் கேட்க வேண்டும். எந்த ஒரு குரலையும் ஒடுக்கவோ நசுக்கவோ கூடாது" என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications