பற்றி எரியும் பிரான்ஸ்! இப்போ மட்டுமல்ல 1979லிருந்தே இதுதான் நிலைமை.. காரணத்தை விளக்கும் ஆய்வாளர்கள்
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த 17 வயது சிறுவனை போக்குவரத்து காவல்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரான்ஸ் முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. இது போன்று வன்முறை சம்பவங்கள் பிரான்ஸில் நடைபெறுவது இது முதல் முறையல்ல.
அமெரிக்காவில் இருப்பது போல் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் நிறவெறி இன்றளவிலும் நீடித்து வருகிறது. இதற்கு ஓர் உதாரணம்தான் தற்போது 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம். நான்டெர் புறநகர்ப் பகுதியில் மஞ்சள் நிற கார் ஒன்று வேகமாக செல்வதை கவனித்த போக்குவரத்து காவலர்கள் காரை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், கார் போக்கு காட்டி பறந்திருக்கிறது. இருப்பினும் ஒரு கட்டத்தில் காரை தடுத்து நிறுத்திய காவலர்கள் அதை ஓட்டி வந்தவரை சுட்டு கொன்றுள்ளனர்.

காரை ஓட்டி வந்தது ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த 17 வயது சிறுவன். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவியது. இதுதான் வன்முறைக்கு வித்திட்டது. முதலில் போராட்டக்காரர்கள் குப்பை தொட்டியை தீயிட்டு கொளுத்தினர். பின்னர் வாகனங்களுக்கும் தீயிட்டனர். இதை தடுக்க முயன்றபோது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ஆனால் இப்படியான கலவரங்கள் பிரான்ஸில் நடைபெறுவது இது முதல் முறையல்ல.
கடந்த 1979ம் ஆண்டிலிருந்தே இது போன்ற கலவரங்கள் வெடித்து வருகிறது. லியோன் புறநகர் பகுதியான வால்க்ஸ்-என்-வெலினில் வட ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் இறங்கினர். இது 'பான்லியூ' கலவரம் 1979 என்று அழைக்கப்படுகிறது.
அதேபோல 1991ம் ஆண்டு அரபு நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் சூப்பர் மார்க்கெட் பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து கலவரம் வெடித்தது. இதே ஆண்டில் கார் திருடப்பட்டதாக ஒரு பெண் மற்றும் இளைஞர் ஒருவர் என இருவர் அடுத்தடுத்து காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவமும் கலவரத்திற்கு அடித்தளமிட்டது.
பின்னர் 1992 மற்றும் 1995ம் ஆண்டுகளிலும் கலவரங்கள் அதிக அளவு நடந்திருக்கிறது. முதல் கலவரம் போலீஸ் தடுப்பு நோக்கி சென்ற காரை அவர்கள் சுட்டனர். இதில் காரை ஓட்டி வந்த 18 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தீ வைத்தனர். அதேபோல இரண்டாவது சம்பவத்தில் அல்ஜீரிய பயங்கரவாதி காலித் கெல்கலை போலீஸ் என்கவுன்ட்டர் செய்தது. இதனால் வன்முறை வெடித்தது.
இந்த கலவரங்களின் உச்சமாக 2005ம் ஆண்டு நடந்த சம்பவங்கள் சொல்லப்படுகிறது. பிரான்ஸ் தலைநகரமான பாரிஸின் வடக்கில் உள்ள Clichy-sous-Bois எனும் பகுதியில் இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றிருக்கின்றனர். இதனையடுத்து அவர்கள் மீது மின்சாரத்தை போலீசார் பாய்ச்சியுள்ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்ச்சியாக 3 வாரம் வரை கலவரங்களை உருவாக்கியது.
இப்படியாக பல்வேறு வன்முறைகள் ஏற்பட்டுள்ளன. இதை தடுக்க முயலும்போது ஏற்படும் மோதல்களில் காவல்துறையினர் சிலரும், பொதுமக்கள் தரப்பில் சிலரும் உயிரிழப்பது தொடர் கதையாக நீடித்து வருகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரெஞ்சு அரசாங்கம் ஏழை எளிய மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க தொடங்கியது. 1945 மற்றும் 1975ம் ஆண்டுகளில் ஏராளமான குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. இங்கு சில ஆண்டுகள் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது. ஆனால் இதற்கடுத்த ஆண்டுகளில் அதிகரித்த புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை, வேலையின்மை, சுகாதார கட்டுமானங்களில் ஏற்பட்ட பலவீனம் ஆகியவை காரணமாக மக்களிடையே பெரும் கொந்தளிப்பான சூழல் உருவானது.
இப்படி இருக்கையில் காவல்துறையினர் தொடர்ந்து கறாரான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்துதான் பிரச்னைகள் பெரியதாக வெடித்தது. கடந்த 1979ம் ஆண்டிலிருந்து வெடித்து வரும் கலவரங்களுக்கு இதுதான் காரணமாக சொல்லப்படுகிறது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications