"ஆ"வென அலறிய பாட்டி.. விரட்டி விரட்டி பலாத்காரம்.. 25 முறை கத்தியால் குத்தி.. காமுகனை அள்ளிய போலீஸ்
62 வயது பாட்டியை கற்பழித்து கொன்ற இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்
பாட்னா: 62 வயசு என்றெல்லாம் அந்த இளைஞர் பார்க்கவில்லை.. பாட்டிக்கு பாலியல் சீண்டல் தந்துள்ளார்.. அதுபோதாமல் பாட்டியை பலாத்காரமே செய்துவிட்டார்.. அதுவும் போதாமல் மொத்தம் 25 முறை கத்தியால் எடுத்து குத்திவிட்டார்.. அதுவும் போதாமல் கழுத்தையும் அறுத்துவிட்டார்..!
அந்த பாட்டிக்கு 62 வயதாகிறது.. பீகாரை சேர்ந்தவர்.. மகன், பேரன்களுடன் டெல்லி டலுபுராவில் வசித்து வருகிறார்.. மகன் நொய்டாவில் ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.
மகன் வருமானம் போதாது என்பதால், பிழைப்புக்காக தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் பாட்டி. பகலெல்லாம் வியாபாரம் செய்துவிட்டு, இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து சமைத்து சாப்பிடுவார்கள்.

காய்கறி
அப்படித்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை காய்கறி விற்க சென்றிருக்கிறார்.. அவருடன் பேரனும் சென்றுள்ளார்.. வியாபாரத்தை முடித்துக்கொண்டு சமைத்து சாப்பிட வேண்டும் என்பதற்காக பேரனை அழைத்து கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தார் பாட்டி. அப்போது பின்னாடியே ஒரு இளைஞன் வந்துகொண்டிருந்தார்.. 30 வயதிருக்கும்.. ஒருகட்டத்தில் சுற்றுமுற்றும் பார்த்த அந்த இளைஞர், திடீரென பாட்டியை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்..

இளைஞர்
இதை பார்த்து பதறிபோன பாட்டி, அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.. ஆனாலும் அந்த இளைஞர், பாட்டியை பலாத்காரம் செய்துவிட்டார்.. விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக, கத்தியை எடுத்து பாட்டியை குத்திவிட்டார்.. அரைகுறையாக உயிர் ஊசலாட கூடாது என்பதற்காக மொத்தம் 25 முறை கத்தியால் குத்தி, அப்போதும் ஆவேசம் அடங்காமல், கழுத்தையும் அறுத்து விட்டார். இதையெல்லாம் கண்ணெதிரே பார்த்த பேரனோ பதறி கதறி கொண்டிருந்தான்..

கொலை
இந்த சம்பவம் நடந்தது பாட்டியின் வீட்டு பக்கத்தில்தான். இதனிடையே வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மகன், அம்மாவை காணாமல் தேடி வந்தார்.. அப்போதுன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து துடிதுடித்தார்.. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றார்.. ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.. இதையடுத்து விஷயத்தை போலீசுக்கும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வழக்கு பதிவு
பின்னர், போலீசார் இதுசம்பந்தமாக வழக்கு பதிவு செய்ததுடன், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த பாட்டியின் வீட்டருகே உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.. அதில் தென்பட்ட வெறிபிடித்த இளைஞன் தட்டி தூக்கிவிட்டனர்.. இப்போது அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.. லாக்டவுன் சமயத்தில், நாளுக்கு நாள் வடமாநிலங்களில் குற்ற செயல்கள் அதிகரித்து வரும்நிலையில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை தந்து வருகிறது!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications