பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகாரில் பிரிட்ஜ் ஹீஸ்ட்.. 60 அடி பாலம் கொள்ளை -ப்ரொஃபசராக செயல்பட்ட அரசு அதிகாரி உட்பட 8 பேர் கைது

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் 500 டன் உலோகத்தை திருடுவதற்காக 60 அடி நீள பாலத்தை உடைத்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

பீகாரின் ரோதாஸ் மாவட்டத்தில் உள்ள நஸ்ரிகஞ்ச் பகுதியை அடுத்துள்ள அமியவார் கிராமத்தில் நீர்நிலையை தாண்டிச் செல்ல 60 அடி நீள பாலம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கொள்ளையர்கள் சிலர் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் கிராம மக்களை ஏமாற்றி அந்த பாலத்தையே கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

அவர்கள் ஆண்டி இந்தியன்ஸ்.. மகா பாவிகள்! - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கொதிப்பு அவர்கள் ஆண்டி இந்தியன்ஸ்.. மகா பாவிகள்! - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கொதிப்பு

அரசு அதிகாரிகள் போல் நாடகம்

அரசு அதிகாரிகள் போல் நாடகம்

நீர்பாசனத்துறையில் இருந்து வந்த உயர் அதிகாரிகளை போல நாடகமாடிய கொள்ளையர்களை உள்ளூர் அதிகாரிகளும், பொதுமக்களும் அப்படியே நம்பி பாலத்தை எடுத்துச் செல்ல உதவியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜேசிபி, கேஸ் கட்டர் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்களை பயன்படுத்திய கொள்ளையர்களை பாலத்தை இடிக்கும் பணியை தொடங்கினர்.

 கொள்ளையர்களுக்கு ஒத்துழைத்த அப்பாவி மக்கள்

கொள்ளையர்களுக்கு ஒத்துழைத்த அப்பாவி மக்கள்

பாலத்தை இடிக்கும்போது சில சிரமங்களை சந்தித்த கொள்ளையர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் மூன்றே நாட்களில் மக்களின் ஒத்துழைப்போடு பாலத்தை இடித்து இருக்கின்றனர். தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதையே மக்களும் அப்பகுதி அதிகாரிகளும் உணர்வதற்குள் கொள்ளையர்கள் பாலத்தை இடித்து அதிலிருந்த 500 டன் உலோகத்தை எடுத்துச் சென்றனர்.

பலே திட்டத்துடன் கொள்ளை

பலே திட்டத்துடன் கொள்ளை

1972 ஆம் கட்டப்பட்ட 50 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் 60 அடி நீளமும் 12 அடி உயரமும் கொண்டது. இது மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டதால் மக்கள் யாருமே பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். அதை இடித்துவிட்டு வேறு பாலத்தை அரசு அமைக்க இருப்பதாக கூறி தங்களை நீர்பாசனத்துறை அதிகாரிகளை போல் காட்டிக்கொண்டு இந்த பலே கொள்ளையை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

வடிவேல் நகைச்சுவை பாணியில் கொள்ளை

வடிவேல் நகைச்சுவை பாணியில் கொள்ளை

சிறிது நேரம் கழித்து தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த கொள்ளையர்கள், போலீசாரை அழைத்து, வடிவேல் காமெடியில் வருவதைபோல் கிணற்றை காணோம் என்ற பாணியில் பாலத்தை காணோம் என புகாரளித்து உள்ளனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8 பேர் கொண்ட கும்பல் கைது

8 பேர் கொண்ட கும்பல் கைது

இந்த நிலையில், பாலத்தை திருடிய 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொள்ளை திட்டத்துக்கு மூளையாக செயல்பட்ட நீர்பாசனத்துறை அதிகாரியை போலீசார் மடக்கிப்பிடித்துள்ளனர். அவரது வழிகாட்டுதலின் பேரிலேயே இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பதாக தெரிவித்துள்ள ரோதாஸ் மாவட்ட எஸ்.பி., திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. இயந்திரம், கொள்ளையடிக்கப்பட்ட 247 கிலோ இரும்பை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

English summary
Police have arrested a gang of 8 people who broke a 60 foot long bridge in Bihar to steal 247 kg of metal: பீகாரில் 247 கிலோ உலோகத்தை திருடுவதற்காக 60 அடி நீள பாலத்தை உடைத்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X