பீகார் மாநில தலைமை செயலாளர் அருண் குமார் சிங் கொரோனாவுக்கு பலி - முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல்
பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங் கொரோனா தொற்றுக்கு பலியானார். பாட்னாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாட்னா: பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தினசரியும் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். ஏழை, பணக்காரன், அரசு அதிகாரி, தொழிலதிபர் என எந்த வித வித்தியசாமும் இன்றி பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை இயக்குநர், மருத்துவர் அகமது அப்துல் ஹய் தெரிவித்தார்.
1985ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அருண் குமார், கடந்த பிப்ரவரி பிகார் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி முடியவிருந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
பிகார் முதல்வராக நிதிஷ் குமார் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த மறுநாள் தலைமைச் செயலாளராக அருண் குமார் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருண்குமார் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த வேதனையையும், வருத்தங்களையும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளர் மறைவுக்காக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications