5 மாநில தேர்தல்தான் முக்கியமா? காங்கிரஸை வெளுத்த நிதிஷ்குமார்! “இந்தியா” கூட்டணிக்கு ”கொள்ளி”?
பாட்னா: லோக்சபா தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அக்கறை செலுத்தாமல் 5 மாநில தேர்தலில் மட்டுமே மூழ்கிக் கிடக்கிறது; இந்தியா கூட்டணி பற்றி காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை என ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆர்ஜேடி மூத்த தலைவரும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இருவரும்தான் இந்தியா முழுவதும் பயணம் செய்து அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து "இந்தியா" கூட்டணியை கட்டமைத்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியும் மறுவாழ்வு பெற்றது. பாட்னா, பெங்களூர், மும்பை நகரங்களில் அடுத்தடுத்து "இந்தியா" கூட்டணி கூட்டங்கள் நடந்தன.

தற்போது 5 மாநில தேர்தல்களில் "இந்தியா" கூட்டணி என்பது இல்லாமலேயே போய்விட்டது. "இந்தியா" கூட்டணி கட்சிகளுடன் இணக்கான தொகுதி பங்கீட்டை மேற்கொள்ள காங்கிரஸ் முன்வரவில்லை. இதனால் இந்தியா கூட்டணியில் இருந்தாலும் சமாஜ்வாதி கட்சி, இடதுசாரிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் பீகாரில் இடதுசாரிகள் நடத்திய கூட்டம் ஒன்றில் பங்கேற்ற நிதிஷ்குமார், தேசத்தின் வரலாற்றை சிலர் மாற்ற முயலுகின்றனர். அந்த சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டிய தேவை உணர்த்தி அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணியை அரும்பாடுபட்டு உருவாக்கினோம். பாட்னா, பெங்களூர், மும்பை கூட்டங்களுக்குப் பின்னர் இந்தியா கூட்டணியில் எந்த வித செயல்பாடுமே இல்லை.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் குறித்து காங்கிரஸுக்கு அக்கறை இல்லை. காங்கிரஸுக்கு முழு கவனமும் இப்போதைய 5 மாநில தேர்தலில்தான் இருக்கிறது. அனேகமாக 5 மாநில தேர்தல் முடிவடைந்த பின்னர் இந்தியா கூட்டணி தலைவர்களை காங்கிரஸ் அழைக்கக் கூடும் என காட்டமாக சாடினார் நிதிஷ்குமார்.
ஏற்கனவே இந்தியா கூட்டணி எங்கே இருக்கிறது என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி இருந்தார். இப்போது இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமாரே அந்த கூட்டணியின் எதிர்காலம் என்னவாகுமோ? என விரக்தியையும் கோபத்தையும் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications