பீகாரில் நமது மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் - ராஷ்டிரிய ஜனதா தளம் ட்வீட்
பீகார் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று நமது மகா கூட்டணிதான் தான் ஆட்சி அமைக்கும் என ராஷ்டிரிய ஜனதா தளம் பதிவிட்டுள்ளது.
பாட்னா: பீகாரில் நமது கூட்டணி தான் நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்றும் பல்வேறு தொகுதிகளில் உள்ள கள நிலவரம் நமது கட்சிக்கு சாதகமாக உள்ளது என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மூன்று கட்டங்களாக நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கூட்டணிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

வாக்கு எண்ணிக்கைகள் தாமதமாகி வருகிறது. இதுவரை பதிவான வாக்குகளில் 50 சதவிகித வாக்குகளே எண்ணப்பட்டுள்ளன. ஜேடியு தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை விட அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளது.

ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணி பின்தங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சியுள்ள பகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தால், தற்போது இருக்கும் முன்னிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இதனிடையே ராஷ்டிரிய ஜனதா தளம் தனது ட்விட்டர் பக்கத்தில் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பீகாரில் நமது கூட்டணி தான் நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்றும் பல்வேறு தொகுதிகளில் உள்ள கள நிலவரம் நமது கட்சிக்கு சாதகமாக உள்ளது என்றும் பதிவிட்டுள்ளது.

அனைத்து துறைகளிலிருந்தும் வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட தகவல்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளன. இரவு தாமதமாக எண்ணும். மகா கூட்டணி நிச்சயம் வெல்லும் மாற்றம் வரும். பீகார் மாறிவிட்டது. அனைத்து வேட்பாளர்களும் முகவர்களும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்கு எண்ணும் மண்டபத்தில் இருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications