எல்லாத்துக்கும் "அது"தான் காரணம்.. நிதீஷ் குமார் அல்ல.. அப்படி போடுங்க தலைவரே!
தோல்விக்கான காரணத்தை கேசி தியாகி கூறியுள்ளார்
பாட்னா: பீகார் தேர்தலில் ஜேடியூ தோற்று விட்டதாக அந்தக் கட்சியின் தலைவரான கேசி தியாகி மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தோல்விக்கான காரணத்தைத் தூக்கி கொரோனா தலையில் அவர்
போட்டுள்ளார்.
பீகார் தேர்தலில் நிதீஷ் குமார் ஆட்சி முடிவுக்கு வரும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தன. ஆனால் அது பலிக்குமா என்று தெரியவில்லை. காரணம் இந்த நிமிடத்தில் பாஜக - ஜேடியூ கூட்டணிதான் முதலிடத்தில் உள்ளது.

அடுத்து படு நெருக்கமாக ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி 2வது இடத்தில் உள்ளது. தனிப் பெரும் கட்சியாக பாஜகவும், 2வது இடத்தில் ஆர்ஜேடியும் உள்ளன. நிதீஷ் கட்சிக்கு 3வது இடம்தான் கிடைத்துள்ளது. எனவே எப்படிப் பார்த்தாலும் நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக வர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
இந்த நிலையில் ஜேடியூவுக்கு இது தோல்விதான் என்பதை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே சி தியாகி ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் கொரோனா மீது அவர் பழியை தூக்கிப் போட்டுள்ளார். இதுகுறித்து தியாகி, ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் சொல்லும்போது, "கொரோனாவால் ஏற்பட்ட தாக்கம், பொருளாதார பாதிப்பு ஆகியவைதான் நிதீஷ் குமாரையும் அவரது கட்சியையும் கை விட்டு விட்டன. மற்றபடி தேஜஸ்வியாதவால் நிதீஷ் குமாருக்கு பின்னடைவு என்பதை ஏற்க முடியாது" என்று கூறியுள்ளார் தியாகி.
தியாகி மேலும் சொல்லுகையில், " பிரான்ட் நிதீஷ் அப்படியேதான் உள்ளது. இயற்கையின் கோபத்திற்கு நாம் என்ன செய்ய முடியும். சிராக் பாஸ்வான் ஒரு பக்கம் உள்ளடி வேலைகளைப் பார்த்து விட்டார். பாஜக கூட்டணி என்று சொல்லிக் கொண்டே எங்களை பாதிக்கும் வகையில் அவர் செயல்பட்டார். அவரது பிரச்சாரம் முழுவதும் நிதீஷ் குமாரை மையப்படுத்தியே இருந்தது" என்றார் தியாகி கோபமாக.
பாவம் அந்த கொரோனாவுக்கு வாய் இருந்தாலும் அழுது விடும்.. பின்னே, எல்லாப் பேரும் அது தலையிலேயே பழியைப் போட்டுட்டு வந்தா என்னதான் பண்ணும் பாவும் அதுவும். "பொறந்து வளர்ந்த" சீனாவில் கூட அது இப்படி கஷ்டப்பட்டிருக்காது.. "புகுந்த வீடான" இந்தியாவில்தான் ரொம்பக் கஷ்டப்படுது பாவம்!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications