பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிதிஷை வீழ்த்த சபதம் செய்த பிரஷாந்த் கிஷோர்.. திடீர் சைலண்ட்.. 8 மாதமாக எங்கே போனார்?.. பரபர பின்னணி

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் இளைஞர்கள் பெரிய மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று சபதம் செய்த அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் தற்போது கப்சிப் என்று ஆகியுள்ளார். கடந்த 8 மாதங்களாக இவர் பீகார் பக்கமே செல்லவில்லை.. நீங்கள் எப்படி மீண்டும் ஆட்சி அமைக்கிறீர்கள் என்று பார்க்கிறேன், என நிதிஷ் குமாருக்கு சபதம் விட்டவர்.. இப்போது சைலன்ட் ஆகிவிட்டார்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பீகார் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. எக்சிட் போல் முடிவுகள் எல்லாம் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி வெற்றிபெறும் என்று கூறிய நிலையில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அதிரடியாக வென்றுள்ளது .

பீகார் தேர்தலில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் 125 இடங்களில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வென்று ஆட்சியை தக்க வைக்கிறது. 110 இடங்களில் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி வென்றுள்ளது.

பாஜகவுக்கு பீகார் வெற்றியானது தமிழகத்திலும் தொடரும்.. எல் முருகன் பகீர் பேச்சு பாஜகவுக்கு பீகார் வெற்றியானது தமிழகத்திலும் தொடரும்.. எல் முருகன் பகீர் பேச்சு

எப்படி

எப்படி

இந்த பீகார் தேர்தலில் பலரும் எதிர்பார்த்த.. ஆட்சியை மாற்றுவார் என்று தொடக்கத்தில் கணிக்கப்பட்ட பிரஷாந்த் கிஷோர்.. இந்த தேர்தல் குறித்து எதுவுமே சொல்லவில்லை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் துணை தலைவராக இருந்த பிரஷாந்த் கிஷோர் சில மாதங்களுக்கு முன் நிதிஷ் குமாரால் நீக்கப்பட்டார். பாஜக ஆட்சிக்கு எதிராகவும், சிஏஏவிற்கு எதிராகவும் பேசிய காரணத்தால் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

நீக்கம்

நீக்கம்

2015ல் நிதிஷ் குமாருக்காக தேர்தல் பணிகளை செய்து.. அப்படியே கட்சிக்குள் வந்தவர்.. திடீரென நீக்கப்பட்டார். அப்போது கட்சியில் இருந்து வெளியேறிய பிகே.. வெளிப்படையாக நிதிஷ் குமாருக்கு எதிராக சபதம் செய்து இருந்தார். நீங்கள் எப்படி மீண்டும் ஆட்சி அமைக்கிறீர்கள் என்று பார்க்கிறேன் என்று வெளிப்படையாக நிதிஷ் குமாருக்கு எதிராக சபதம் விட்டார்.

தொடக்கம்

தொடக்கம்

இதற்காக அவர் ''பாட் பீகார் கி'' என்ற பிரசாரத்தையும் கூட தொடங்கினார். பீகாரின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று.. அங்கு இருக்கும் இளைஞர்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த போகிறேன், என்று குறிப்பிட்டார். பீகாரில் நிதிஷ் குமாருக்கு எதிரான பிரச்சார யுக்தியாக இது பார்க்கப்பட்டது. பிப்ரவரி மாதம் இந்த திட்டத்தை அறிவித்த பிரஷாந்த் கிஷோர்.. அதன்பின் 8 மாதமாக பீகார் பக்கமே செல்லவில்லை.

பீகார் செல்லவில்லை

பீகார் செல்லவில்லை

மேற்கு வங்கம், தமிழகம் என்று மாநில கட்சிகளுடன் அடுத்த வருட சட்டமன்ற தேர்தலுக்காக பிகே தேர்தல் பணிகளை செய்து வருகிறார். இதனால் அவர் பீகார் பக்கமே செல்லவில்லை. பாட் பீகார் கி பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை. 8 மாதமாக அவர் பீகார் செல்லவில்லை.. சபதம் ஒரு பக்கம் அப்படியே தூங்கிக் கொண்டு இருக்க.. பிகே தனக்கு காசுதான் முக்கியம் என்று மற்ற மாநில கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசனை செய்ய சென்றுவிட்டார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

நிதிஷ் குமாருக்கும் எதிராக இந்த தேர்தல் நேரத்தில் பிகே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் சிலர்.. எல்ஜேபி கட்சியின் சிராஜ் பாஸ்வன் பாஜக கட்சிக்கு எதிராக திரும்ப பிகேதான் காரணம் என்று கூறினார்கள். கூட்டணியை உடைக்க வேண்டும் என்று பிகேதான் சிராக் பாஸ்வனை வெளியே கொண்டு வந்தார் என்றும் கூறுகிறார்கள். சிராக் பாஸ்வனின் வேட்பாளர் அறிவிப்பு கூட.. கொஞ்சம் பிகே ஸ்டைலில்தான் இருந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

சிராக் பாஸ்வான் பின்னே இருந்து பிகே நிதிஷ்க்கு எதிராக மறைமுகமாக செயல்பட்டார் என்று புகார் வைக்கப்பட்டது. ஆனால் சிராக் ஒருவகையில் அதிருப்தி வாக்குகளை பிரித்து பாஜக கூட்டணிக்கு இந்த தேர்தலில் பி டீம் போலத்தான் செயல்பட்டார் என்று கூற வேண்டும். இவருக்கு சிராக் பின் கண்டிப்பாக பிகே இருக்க வாய்ப்பு இல்லை என்று காங்கிரஸ் நம்புகிறது. இதை பிகேவும் உறுதி செய்துள்ளார்.

எதுவும் செய்யவில்லை

எதுவும் செய்யவில்லை

இது தொடர்பாக பிகே அளித்த பேட்டியில், பீகார் தேர்தலில் இப்போது நான் எதுவும் செய்யவில்லை. நான் கடைசியாக சிராக்கை பார்த்து பல மாதங்கள் ஆகிறது. என்னுடைய பெயரை சொல்லி நிதிஷ் குமாரை ஏமாற்ற பார்க்கிறார்கள். சிராக் வேகமாக வளர்ந்து வருகிறார். அதை நிதிஷ் குமார் உணரவில்லை என்று, பிகே குறிப்பிட்டுள்ளார்.

இல்லை

இல்லை

பீகார் தேர்தலில் பெரிய மாற்றம் செய்ய போவதாக.. கோபமாக கட்சியை விட்டு கிளம்பிய பிகே இந்த தேர்தலில் எதுவும் செய்யவில்லை. நான் இந்த தேர்தலில் எதுவும் செய்யவில்லை என்று பிகேவே ஒப்புக்கொண்டுள்ளார். இவரின் சபதத்தை பார்த்து ஆட்சி மாற்றம் நடக்கும் என்று நம்பி காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி தேவையில்லாமல் சில்லறையை சிதற விட்டதுதான் மிச்சம்!

English summary
Bihar Election Results: No Prashant Kishor didn't do anything in the state poll against Nithish Kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X