Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேஜஸ்வி முதல்.. தேஜ் பிரதாப் யாதவ் வரை! ஸ்டார் தொகுதிகளின் நிலவரம்! முழுவிவரம்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரின் 243 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றன. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பீகாரின் முக்கிய தொகுதிகள் எது, கடந்த காலங்களில் எந்த கட்சி கோலோச்சியது? தற்போது யார் யார் களமிறங்கியிருக்கின்றனர் என்பது குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.

சசாரம், கோபால்கஞ்ச், ராம்நகர், ராகோபூர் மற்றும் அலினகர் ஆகிய தொகுதிகள் பெரும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கோட்டைகள் முதல் பாஜகவின் பலமான பகுதிகள் வரை பல இடங்களில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bihar Election 2025 2025 Bihar Election Results 2025 2025

ராகோபூர் சட்டமன்ற தொகுதி

பீகாரின் வைசாலி மாவட்டத்தில் உள்ள ராகோபூர் சட்டமன்றத் தொகுதி, ஹாஜிப்பூர் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் (ஆர்ஜேடி) கோட்டையாகும். கடந்த 2020 தேர்தலில், ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ், பாஜகவின் சதீஷ் குமாரை 38,174 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இத்தொகுதியில் வெற்றி பெற்றார். கடந்த 2000-2010 வரை இந்த தொகுதி ஆர்ஜேடி வசம்தான் இருந்தது. 2010ல் சதீஷ் குமார் வெற்றி பெற்றார். ஆனால் 2015-2020 வரை மீண்டும் தொகுதியை ஆர்ஜேடி கைப்பற்றியது. இந்த தேர்தலில் இவ்விரு தலைவர்களும் மீண்டும் மோதியுள்ளனர்.

இந்த தொகுதியில் தற்போது 21 சுற்றுகள் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டிருக்கின்றன. மாலை 4 மணி நிலவரப்படி தேஜஸ்வி யாதவ் 81,971 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் 77,034 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

மஹுவா சட்டமன்ற தொகுதி

மஹுவா தொகுதியில் தேஜஸ்வி யாதவ் அண்ணன், தேஜ் பிரதாப் யாதவ் களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) வேட்பார்ளர் சஞ்சய் குமார் சிங் 63,117 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் 31287 வாக்குகளுடன் ஆர்ஜேடி வேட்பாரளர் முகேஷ் குமாரும், மூன்றாவது இடத்தில் 25,474 வாக்குகளுடன் தேஜ் பிரதாப் யாதவும் இருக்கிறார்.

சசாரம் சட்டமன்ற தொகுதி

பீகார் ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாரம் சட்டமன்றத் தொகுதி, சசாரம் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த 2020 தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வேட்பாளர் ராஜேஷ் குமார் குப்தா, ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் அசோக் குமாரை 26,423 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த முறை ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வாஹாவின் மனைவி சினேலதா குஷ்வாஹா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் சத்யேந்திர சாஹ் ஆகியோர் முக்கியப் போட்டியாளர்களாகக் களமிறங்கியிருக்கின்றனர்.

இந்த தொகுதியில் 12 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டிருக்கின்றன. அதன்படி 38,628 வாக்குகள் பெற்று சினேலதா முன்னிலையிலும், 28,692 வாக்குகள் பெற்று சத்யேந்திர சாஹ் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.

கோபால்கஞ்ச் சட்டமன்ற தொகுதி

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள இத்தொகுதி, கோபால்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். 2022 இடைத்தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக பிரிந்த பிறகு நடந்த முதல் தேர்தலில், பாஜக இத்தொகுதியை தக்கவைத்துக் கொண்டது. மறைந்த முன்னாள் அமைச்சர் சுபாஷ் சிங்கின் மனைவி குசும் தேவி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மோகன் பிரசாத் குப்தாவை 1,794 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இந்த முறை ஓவைசி கட்சி சார்பில் அனாஷ் சலாம் (AIMIM), காங்கிரஸ் சார்பில் ஓம் பிரகாஷ் கார்க் , ஆம் ஆத்மியின் டாக்டர் பிரிஜ் கிஷோர் குப்தா, பாஜகவின் சுபாஷ் சிங் மற்றும் டாக்டர் சஷி சேகர் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்கு முன், 2020 மற்றும் 2015 தேர்தல்களில், பாஜகவின் சுபாஷ் சிங் முறையே பகுஜன் சமாஜ் கட்சியின் அனிருத் பிரசாத்தையும், ஆர்ஜேடியின் ரேயாஹுல் ஹக்கையும் 36,752 மற்றும் 5,074 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை கடைசி சுற்றுக்கு வந்திருக்கிறது. 96,892 வாக்குகளுடன் சுபாஷ் சிங் முன்னிலையில் இருக்கிறா்.

ராம்நகர் சட்டமன்ற தொகுதி

பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் அமைந்துள்ள ராம்நகர் சட்டமன்றத் தொகுதி, பாஜகவின் வசம் உள்ளது. 2020 தேர்தலில், பாஜகவின் பகீரதி தேவி, காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் ராமை 15,796 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இந்த தேர்தலில் ஆர்ஜேடியின் சுபோத் பாஸ்வான் மற்றும் பாஜகவின் நந்த் கிஷோர் ராம் ஆகியோர் முக்கியப் போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர். 2015 தேர்தலிலும் பகீரதி தேவி, காங்கிரசின் பூர்ணமாசி ராமை 17,988 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 24வது சுற்றை எட்டியிருக்கிறது. 99,302 வாக்குகளுடன் நந்த் கிஷோர் முன்னிலையில் இருக்கிறார்.

அலினகர் சட்டமன்ற தொகுதி

பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலினகர் சட்டமன்றத் தொகுதி, தர்பங்கா மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இங்கு சமீபகாலமாக கடுமையான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 2020 தேர்தலில், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி வேட்பாளர் மிஷ்ரி லால் யாதவ், ஆர்ஜேடியின் வினோத் மிஷ்ராவை 3,101 வாக்குகள் என்ற குறைந்த வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த முறை ஆர்ஜேடியின் வினோத் மிஷ்ராவுக்கும், 25 வயதான பாஜகவை சேர்ந்த பிரபலமான நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. 2015 தேர்தலில், ஆர்ஜேடியின் அப்துல் சித்திக், அப்போது பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட மிஷ்ரி லால் யாதவை 13,460 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 21வது சுற்றில் இருக்கிறது. 74,885 வாக்குகளுடன் மைதிலி தாகூர் முன்னிலையில் இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+