பீகார்: கட்சியையே ஆட்டைய போட பார்த்தாரு நிதிஷ்குமார்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மாஞ்சி மகன்!
பாட்னா: நாடு தழுவிய அளவில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கூட்டணி கட்சியான ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா குடைச்சல் கொடுக்கிறது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அமைச்சரவையில் இருந்து ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா நிறுவனர் ஜிதன் ராம் மாஞ்சியின் மகன் சந்தோஷ்குமார் சுமன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார் நிதிஷ்குமார். பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளன. இதே பார்முலாவையே நாடு முழுவதும் உருவாக்க தீவிரம் காட்டுகிறார் நிதிஷ்குமார். இதன் ஒரு கட்டமாக, ஜூன் 23-ந் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை நிதிஷ்குமார் ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்நிலையில் பீகார் அமைச்சரவையில் இருந்து சந்தோஷ்குமார் சுமன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக சந்தோஷ்குமார் சுமன் கூறுகையில், ஐக்கிய ஜனதா தளத்துடன் அவாமி மோர்ச்சாவை இணைக்க வேண்டும் என நெருக்கடி தருகிறார் நிதிஷ்குமார். பீகார் அமைச்சராக பதவியில் நீடித்தால் கட்சியே இருக்காது என்கிற நிலைதான் உள்ளது. எங்கள் கட்சியைக் காப்பாற்றவே ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications