Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேஜஸ்வி காலை வாரிய காங்கிரஸ்? வேலைக்கு ஆகாத ராகுல் பிரச்சாரம்! பீகார் தேர்தல் உணர்த்துவது இதுதான்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் கடந்த முறையைப் போலவே இந்த முறையும் தேஜஸ்வியைக் காங்கிரஸ் கட்சியைப் பின்னால் இழுத்துள்ளது. போட்டியிட்ட 61 தொகுதிகளில் காங்கிரஸ் 11 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருக்கும் சூழலில், அது இந்தியா கூட்டணிக்கு, குறிப்பாகத் தேஜஸ்வி யாதவுக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்துள்ளது. ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரை மக்களிடையே எதிர்பார்த்த எழுச்சியை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

பாஜக தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகச் சொல்லி ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் வாக்கு திருட்டு நடந்துள்ளதாகச் சொல்லிப் பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தக் குற்றச்சாட்டை முதலில் முன்வைத்தார்.

Bihar Election 2025 2025 Congress Bihar Election Results 2025 2025

வாக்காளர் அதிகார யாத்திரை

அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி பீகாரில் 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில் யாத்திரை ஒன்றை நடத்தினார். நாட்டின் பல பகுதிகளில் வாக்கு திருட்டு நடந்துள்ளதாகவும் அதேபோல பீகாரிலும் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லி ராகுல் காந்தி இந்த வாக்காளர் அதிகார யாத்திரையை நடத்தினார். பீகாரின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று அவர் மக்களைச் சந்தித்தார்.

ராகுல் காந்தியுடன் தேஜஸ்வி யாதவும் இந்த யாத்திரையில் கலந்து கொண்டார். பீகார் முழுக்க இந்த யாத்திரை நடந்தது. அங்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்களான தமிழக முதல்வர் ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும், காங்கிரஸ் தலைவர்களான பிரியங்கா காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தீபேந்தர் ஹூடா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வரவேற்பு ஓகே

இந்த யாத்திரைக்கு பாரத் ஜோடோ யாத்திரையைப் போலவே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சமூக வலைத்தளங்களிலும் இந்தப் பிரச்சாரம் தொடர்பாகப் பேசப்பட்டது. இருப்பினும், இந்த யாத்திரையில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் ஆர்ஜேடி, விஐபி மற்றும் இடதுசாரிகள் எனக் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது.

அடம்பிடித்த காங்கிரஸ்

இருப்பினும், இந்த யாத்திரைக்குச் சேர்ந்த கூட்டத்தைக் காட்டியே காங்கிரஸுக்கு எழுச்சி கிடைத்துவிட்டது என பீகார் காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பிட்டனர். இதைக் காரணமாகச் சொல்லியே காங்கிரஸ் அதிக சீட்களை கேட்டது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடியும் வரையும் கூட சீட் பகிர்வில் உடன்பாடு இல்லாமல் இருந்தது. கடந்த முறை 70 சீட்டில் போட்டியிட்ட நிலையில், இந்த முறையும் அதே அளவு சீட் வேண்டும் என காங்கிரஸ் அடம் பிடித்தது.

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறேக 61 இடங்களில் போட்டியிடக் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. இருப்பினும், இதுவே அதிகம் என அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. தேர்தல் முடிவுகளும் அதையே தான் காட்டுகிறது. காங்கிரஸ் என்னதான் 61 இடங்களைக் கேட்டுப் பெற்றாலும் கூட அக்கட்சி இப்போது வரை 11 முதல் 15 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. இது கடந்த முறை வென்ற 19 சீட்களை விடவும் கூட குறைவாகும்.

தோல்வி

அதாவது ராகுல் காந்தி 'வாக்காளர் அதிகார யாத்திரை' இந்தியா கூட்டணிக்கு ஒரு ஊடக வெளிச்சத்தைக் கொடுத்தது உண்மை தான் என்றாலும் அது காங்கிரஸ் எதிர்பார்த்த ஒரு மக்கள் எழுச்சியைக் கொடுக்க தவறவிட்டது என்பதே உண்மை! இதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒரு தோல்வியே கிடைத்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+