சும்மா ஷோவுக்குதான் நிதிஷ்குமார்- ஒரிஜினல் முதல்வர் ஆர்ஜேடி தேஜஸ்வி யாதவ்.. போட்டு தாக்கும் பாஜக
பாட்னா: பீகார் முதல்வராக 8-வது முறையாக நிதிஷ்குமார் இன்று மீண்டும் பதவியேற்றார். அதேபோல் துணை முதல்வராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று பதவியேற்றார். ஆனால் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் ஒப்புக்குதான் இருப்பார்; ஆக்டிங் முதல்வராக தேஜஸ்வி யாதவ்தான் செயல்படுவார் என்கிறது பாஜக.
Recommended Video
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்ட ஜேடியூ இன்று ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பீகார் புதிய கூட்டணி அரசின் முதல்வராக நிதிஷ்குமார்; துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றனர். இந்த கூட்டணி அரசில் காங்கிரஸ் கட்சிக்கு 4 அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட உள்ளது.
பீகார் அரசியல் மாற்றங்கள் தொடர்பாக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் மோடி கூறியதாவது: பாஜக எந்த ஒரு கட்சிக்கும் எப்போதும் துரோகம் செய்தது இல்லை. நாங்கள்தான் பீகார் முதல்வராக நிதிஷ்குமாரை பதவியில் அமர்த்தினோம். பாஜகவின் தயவால்தான் ஐந்து முறை பீகார் முதல்வரானார் நிதிஷ்குமார். ஆர்ஜேடியால் 2 முறை நிதிஷ்குமார் முதல்வரானார். பாஜகவுக்கும் ஜேடியூவுக்கும் இடையே 17 ஆண்டுகால நட்பு இருந்தது. ஜேடியூதான் 2 முறை பாஜகவுடனான உறவை துண்டித்துக் கொண்டது.

பீகார் தற்போது அறிவிக்கப்படாத டீ ஃபேக்டோ முதல்வர் தேஜஸ்வி யாதவ்தான். நிதிஷ்குமார் என்பவர் பொம்மையாகத்தான் முதல்வர் பதவியில் இருப்பார். ஆர்ஜேடியின் எம்.எல்.ஏக்கள் பலம் 80. நிதிஷ்குமாரின் ஜஏடியூவின் பலம் 45-46 மட்டுமே. லாலு பிரசாத்தும் அவரது கட்சியும் எப்படி செயல்படும் என்பதை அனைவருமே நன்கு அறிவார்கள். அதனால்தான் சொல்கிறோம்.. நிதிஷ்குமார் ஒரு பொம்மை முதல்வராகத்தான் இருப்பார். இம்மாநிலத்தின் ஒரிஜனல் முதல்வராக தேஜஸ்வி யாதவ் செயல்படுவார். இவ்வாறு சுஷில் மோடி கூறினார்.
பாஜகவின் மற்றொரு மாஜி துணை முதல்வரான தர்கிஷோர் பிரசாத் கூறியதாவது: 2017-ம் ஆண்டு ஆர்ஜேடிதான் ஜேடியூவை உடைக்க முயற்சிக்கிறது என்றார். இப்போது ஜேடியூவை உடைக்க பாஜக முயற்சிக்கிரது என்கிறார். நிதிஷ்குமார் இப்போது எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்கு பீகார் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு தர்கிஷோர் பிரசாத் கூறினார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications