சிதைந்த அந்தரங்க உறுப்புகள்.. நாக்கை வெட்டி கண்ணை நோண்டி எடுத்த கும்பல்! பீகார் பெண் கொலையில் ஷாக்
பாட்னா: பீகாரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணின் நாக்கை வெட்டி, கண்ணை கூரிய ஆயுதத்தால் நோண்டி எடுத்து, அந்தரங்க உறுப்புகளை சிதைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விசாரணையில் 5 பேர் கும்பல் பற்றிய ஷாக் தகவல் நெஞ்சை பதற வைக்கிறது.
பீகார் மாநிலம் காகரியா மாவட்டம் மெகந்திர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுலேகா தேவி (வயது 45). இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

தற்போது மழைக்காலம் என்பதால் வயலில் நாற்று நடும் பணிக்கான ஆயத்த வேலைகளில் அவர் ஈடுபட்டு இருந்தார். அன்று நீண்டநேரம் ஆகியும் சுலேகா தேவி வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் அவரை தேடி வயலுக்கு சென்றனர்.
இந்த வேளையில் வயலில் சுலேகா தேவி ரத்த வெள்ளத்தில் கொடூரமான முறையில் இறந்து கிடந்தார். சுலேகா தேவியின் உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள் இருந்தன. அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு இருந்தன. கண்கள் கூரிய ஆயுதத்தால் நோண்டப்பட்டு இருந்தது. மேலும் நாக்கும் அறுக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து இறந்த கிடந்த சுலேகா தேவியின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை வெட்டிக்கொன்றவர்கள் யார்? எதற்காக கொன்றனர்? என்பது பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த விசாரணையின்போது தான் சுலேகா தேவியை 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் அவர்களை கைது செய்ய வேண்டும் என சுலேகா தேவியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் சுலேகா தேவியின் கொலை தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் சுலேகா தேவிக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் நிலம் தொடர்பாக தகராறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக கடந்த 2014 ஏப்ரல் மாதம் நடந்த பிரச்சனையில் சுலேகா தேவியின் கணவர், பப்லு சிங் மற்றும் உறவினர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்த வழக்கில் கைதான நபர் கடந்த ஆண்டு விடுதலையானார். அவர்கள் தான் சுலேகா தேவியை கொலை செய்திருக்கலாம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதோடு மகேந்திர சிங், ருலோ சிங், ராஜ்தேவ் சிங், புளுங்கி சிங், சியாம் குமார் சிங் ஆகியோர் தான் சுலேகா தேவியை வெட்டி கொன்றதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். இதையடுத்து இவர்கள் பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‛‛சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொலையாளிகளை தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் பற்றிய முக்கிய தகவல் கிடைத்துள்ளது. விரைவில் கைது செய்வோம்'' என்றனர். இந்த சம்பவம் பீகாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications