பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திரும்பி வந்து தாக்கிய "பூமராங்".. மகாராஷ்டிராவை பிடித்த 40 நாட்களில் பீகாரை இழந்த பாஜக! பெருத்த அடி

Google Oneindia Tamil News

பாட்னா: மகாராஷ்டிராவில் மாபெரும் கூட்டணியை முறித்து ஆட்சிக்கு வந்த பாஜக எண்ணி 40 நாட்களில் பீகாரில் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் மகாராஷ்டிராவில் அமைச்சரவையை அமைக்கும் அதே நாளில் பீகாரில் பாஜக ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் 29ம் தேதி முதல்வர் பதவியில் இருந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக திரும்பியதால் அங்கு ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.

மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி ஆட்சி நடத்தப்பட்டு வந்தது. இந்த கூட்டணிக்கு எதிராக சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார்.

இவருக்கு பின்னால் இருந்து பாஜக இயக்குவதாக புகார்கள் வைக்கப்பட்டன.

பேசாம பாஜக அலுவலகமா மாத்திடலாம்! ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியதாக ரஜினி சொன்னதற்கு ஜோதிமணி கண்டனம் பேசாம பாஜக அலுவலகமா மாத்திடலாம்! ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியதாக ரஜினி சொன்னதற்கு ஜோதிமணி கண்டனம்

 ஆட்சி கவிழ்ந்தது

ஆட்சி கவிழ்ந்தது

சிவசேனா கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் ஆளும் மகா கூட்டணி எதிராக திரும்பியதால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அரசுக்கு எதிராக அதிருப்தியில் இருக்கும் மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் குஜராத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கினார். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே சிவசேனா அரசுக்கு ஆதரவு அளிக்க முடியும் என்று ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

ராஜினாமா

ராஜினாமா

சிவசேனாவிற்கு 56 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் கிட்டத்தட்ட 50 எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவிற்கு ஆதரவாக மாறினார்கள். இதனால் ஆட்சி கவிழும் முன் உத்தவ் தாக்கரே சுயமாக முன் வந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து மகாராஷ்டிராவின் முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல்வர் ஆனார். உத்தவ் தாக்கரேவிற்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது,

அமைச்சரவை

அமைச்சரவை

இன்று சிவசேனா - பாஜக சார்பாக 18 எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் ஆனார்கள். இதில் தலா 9 பேர் இரண்டு கட்சியில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில்தான் மகாராஷ்டிராவில் அமைச்சரவையை அமைக்கும் அதே நாளில் பீகாரில் பாஜக ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மாபெரும் கூட்டணியை முறித்து ஆட்சிக்கு வந்த பாஜக எண்ணி 40 நாட்களில் பீகாரில் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆட்சி மாற்றம்

ஆட்சி மாற்றம்

இதனால் பீகாரில் பாஜக - நிதிஷ் குமார் கூட்டணியில் உருவான என்டிஏ அரசு கவிழுகிறது. இன்று மாலையே பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு.. முதல்வர் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலையே ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவுடன் சேர்ந்து நிதிஷ் குமார் ஆளுநரை பார்த்து கடிதம் அளிக்க உள்ளார். ஒரு பக்கம் மெகா கூட்டணியை உடைத்து ஆட்சிக்கு வந்த பாஜக.. இன்னொரு பக்கம் அதே மெகா கூட்டணியிடம் பூமராங் வீழ்ந்து உள்ளது.

English summary
Boomeerang, How did BJP gain Maharashtra and lose Bihar in 40 days? Boomeerang, How did BJP gain Maharashtra and lose Bihar in 40 days?. மகாராஷ்டிராவில் மாபெரும் கூட்டணியை முறித்து ஆட்சிக்கு வந்த பாஜக எண்ணி 40 நாட்களில் பீகாரில் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X