Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10-ம் வகுப்பில் 99.4 % மதிப்பெண்..! கஷ்ட காலத்திலும் சாதித்த மாணவி...நெட்டிசன்கள் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் தந்தையால் கைவிடப்பட்டு பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் 99.4 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கல்வி கற்பதில் ஆர்வமுடையவர்களுக்கு எதுவும் தடையாக இருக்காது. குறிப்பாக ஏழ்மையில் பிறந்தாலும், துன்பங்களோடு வளர்ந்தாலும் கற்க வேண்டும் என்ற தீராத ஆர்வம் இருந்தால் மட்டும் போதும்.

எத்தனை தடைகளையும் தாண்டி கல்வியில் சாதிப்பார்கள். இதற்கு எடுத்துக்காட்டாய் தான் தற்போது பீகாரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

 பாட்னா மாணவி சாதனை

பாட்னா மாணவி சாதனை

சிறு வயதிலேயே தாய் உயிரிழந்ததாலும், தந்தையும் நீ வேண்டாம் என்று உதறி தள்ளியதாலும் ஆதரவின்றி தவித்த சிறுமி தான் தான் தற்போது அண்மையில் நடந்த சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 99.4 சதவீத மதிப்பெண் எடுத்து சாதித்து காட்டியுள்ளார். பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்த அந்த சிறுமி தடைக்கல் ஒவ்வொன்றையும் படிக்கல்லாக மாற்றி தற்போது இந்த பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

 வருண் காந்தி எம் பி டுவிட்

வருண் காந்தி எம் பி டுவிட்

பாஜக எம்பி வருண்காந்தி மாணவி ஸ்ரீஜா மற்றும் அவரது பாட்டி இணைந்து அளித்த பேட்டி வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், மாணவியின் படிப்பு சார்ந்து அனைத்துக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். மாணவிக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தால் நான் அதிர்ஷ்டசாலி என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. பலரும் மாணவி ஸ்ரீஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலர் மாணவியின் இந்த வெற்றி. . எங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

 நினைத்து வருத்தப்படுவார்

நினைத்து வருத்தப்படுவார்

பாஜக எம்பி வருண் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், ஸ்ரீஜாவின் பாட்டி கூறுகையில், "10-ம் வகுப்பு தேர்வு முடிவினை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஸ்ரீஜாவின் தாய் சிறுவயதிலேயே உயிரிழந்துவிட்டார். மனைவி இறந்ததால், ஸ்ரீஜாவை என்னிடம் விட்டு விட்டு அவர் வேறு திருமணம் செய்துகொண்டார். அதற்கு பின்னர் என்னையோ, ஸ்ரீஜாவையோ பார்க்க வரவில்லை. இப்போது வரை அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியாது. தற்போது ஸ்ரீஜா எடுத்த மதிப்பெண்களை அவர் பார்த்தால் மகளை விட்டு சென்றதை நினைத்து வருத்தப்படுவார்" என்று கூறினார்.

 நெகிழ்ச்சியுடன் பாராட்டு

நெகிழ்ச்சியுடன் பாராட்டு

இந்த நிலையில், மாணவி ஸ்ரீஜா எடுத்த மதிப்பெண் குறித்து நெட்டிசன்கள் பலர் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர். திறமையுள்ளவர்கள் வாய்ப்பை தேடமாட்டார்கள். . வாய்ப்பை உருவாக்குவார்கள் என்பதற்கு மாணவி ஸ்ரீஜாவே சான்று என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதேபோல், கல்வி ஒருவருக்கு எவ்வளவு பெருமையளிக்கிறது என்பதற்கு மாணவி ஒரு எடுத்துக்காட்டு என மற்றொருவர் பதிவிட்டிருந்தார். இதுபோல பலர் மாணவியின் சாதனைக்கு பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+