மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்து.. 3 வயது குழந்தையுடன் தடுமாறி சென்ற கணவர்: பீகார் வினோதம்
பாட்னா: நாளுக்கு நாள் கள்ளக்காதல் கொலைகள் அரங்கேறி வருகின்றன.. மனைவி, கணவன், குழந்தைகள் என தகாத உறவுகளுக்கு பல உயிர்கள் பலியாகி கொண்டிருக்கின்றன.. அதிலும் சமீபகாலமாகவே, திருமணமான புதுமணப் பெண்கள், தங்கள் கணவன்களை கொல்வது பெருகி வருகிறது.. மற்றொருபுறம் திருமணமாகி 15, 20 வருடங்கள் ஆனவர்களும், இதே கள்ளக்காதலுக்காக, தங்கள் இணையை கொன்று வருகிறார்கள். இதனால், பெரும்பாலான கணவன்கள் பீதியில் உள்ளனர்.. குறிப்பாக வடமாநிலத்தில் இந்த சம்பவம் பெருகி கொண்டிருக்கிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்தது.. அங்குள்ள கோண்டா என்ற கிராமத்தில், 42 வயது ஹரிஸ் சந்திரா என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் கரீஷ்மா.. 36 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 15 வருடம் முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது, 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில், சமீபகாலமாகவே, கரீஷ்மாவின் நடத்தையில் வித்தியாசம் தெரிந்துள்ளது.. எனவே, பலமுறை கரீஷ்மாவை, ஹரிஸ் சந்திரா கண்டித்தும் அவரது பேச்சு எடுபடவில்லை.
சாப்பாட்டில் விஷம்
சம்பவத்தன்று, வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு, வீட்டிலேயே மறைந்து கொண்டார் ஹரிஷ் சந்திரா.. பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றுவிட்ட நிலையில், கரீஷ்மா அதே பகுதியில் வசிக்கும் சிவராஜ் என்பவரை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து, உல்லாசமாக இருந்துள்ளார். இதை மறைந்திருந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ஹரிஷ் சந்திரா.
அதுமட்டுமல்ல, கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்ல போவதாகவும், காதலனுடன் சேர்ந்து கரீஷ்மா திட்டமிடுவதை கண்டு அதிர்ந்து போனார் ஹரிஷ் சந்திரா. அதற்கேற்றார்போல் அன்றைய தினம் இரவு, சாப்பாட்டில் விஷம் கலந்து சாப்பிட தந்துள்ளார். மனைவி எடுத்த இந்த முடிவால் நிலைகுலைந்துபோன ஹரிஷ் சந்திரா, உடனடியாக ஊரை கூட்டி பஞ்சாயத்து செய்தார்..
உயிருக்கு ஆபத்து
எப்படியும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், தன்னுடைய மனைவியை சிவராஜுக்கே திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார்.. அதே ஊர் பெரியவர்கள் முன்னிலையில், கள்ளக்காதலனுக்கே மனைவியை திருமணமும் செய்து வைத்தார்.. உடனே கரீஷ்மாவும், தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு, காதலனுடன் செல்ல, 2 மகன்களுடன் தன்னுடைய வீட்டுக்கு சென்றார் ஹரிஷ் சந்திரா.
இந்த சம்பவத்தின் அதிர்வலையே இன்னும் அடங்காத நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.. ஜமுய் என்ற மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதி ஆயுஷி குமாரி - விஷால் பே.. இந்த தம்பதிக்கு கடந்த 2021ல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
மனைவியை காணவில்லை
இந்நிலையில், ஆயுஷிக்கு தன்னுடைய உறவினரான சச்சின் துபே என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. அத்துடன், கடந்த 15ம் தேதி, காதலனுடனேயே சச்சினுடன் வீட்டை விட்டும் வெளியேறி சென்றுவிட்டார் ஆயுஷி குமாரி.
இதனிடையே, தன்னுடைய மனைவியை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் போலீசுக்கு ஓடினார்.. ஆனால், ஆயுஷி குமாரியோ, தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கோர்ட்டுக்கு சென்றார்.. அங்கே மனுவையும் தாக்கல் செய்தார்.. ஆனால், தன்னுடைய 3 வயது மகளை, தன்னுடன் வைத்துக் கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.
முதல் சாட்சி
இதையெல்லாம் கேட்டு கணவர் விஷால் நிலைகுலைந்து போனார்.. விவாகரத்துவரை மனைவி சென்றுவிட்டதால், கள்ளக்காதலனுக்கே அவரை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்..
இதற்காக இரு குடும்பத்தினரிடமும் பேசி சம்மதம் பெற்றார்.. கடந்த 20ம் தேதி உள்ளூர் கோயிலில், ஆயுஷிக்கும், அவரது ஆண் நண்பருக்கும் விஷால் திருமணம் செய்துவைத்தார். இந்த திருமணத்தில் சாட்சியாக நின்றதும் விஷால்தான்,.. இதையெல்லாம் பார்த்து 2 குடும்பத்தினருமே அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
வீடியோ பரபரப்பு
.மனைவிக்கு திருமணம் செய்து வைத்தது குறித்து விஷால் துபே சொல்லும்போது, 'கள்ளக்காதலன் சச்சின் துபேவுடன் வாழ்வது தான் ஆயுஷி குமாரிக்கு மகிழ்ச்சி என்றால், அதனை நான் தடுக்க மாட்டேன். ஆனால், என் மீதான அவரது குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய். இனிமேல் ஆயுஷியை விமர்சிக்க மாட்டேன். அவர் இனி சச்சினின் பொறுப்பு" என்றார்.
இந்த விநோத திருமணத்தின் வீடியோதான் சோஷியல் மீடியாவிலும் வெளியாகி பலரது கவனத்தை பெற்று வருகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications