பீகாரில் ஒரே மயானத்தில் 789 உடல்கள்.. ஆனால் அரசு கூறுவது வெறும் 8 மரணங்கள்.. ஹைகோர்ட் அதிருப்தி
பாட்னா: பீகாரின் பக்ஸர் பகுதியில் கொரோனா உயிரிழப்புகள் குறித்து முரனான தரவுகளை அளித்த பீகார் அரசு துறைகளுக்குக் கண்டனம் தெரிவித்த பாட்னா நீதிபதிகள், விரிவன புதிய அறிக்கையை 2 நாட்களில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர்
உத்தரப் பிரதேசம் - பீகார் எல்லையில் அமைந்துள்ள பக்ஸர் நகரில் அமைந்துள்ள கங்கை நதியில் கடந்த வாரம் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பரபரப்பு ஓய்வதற்கு முன்னரே உத்தரப் பிரதேசத்திலும் கங்கை நதியில் சில சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நீதிபதிகள் அதிருப்தி
இது பீகார் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்த வழக்கை பாட்னா உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா உயிரிழப்புகள் தொடர்பாக மாநிலத் தலைமைச் செயலாளரும், மற்ற அரசு அமைப்புகளும் சமர்ப்பித்த பிரமாண பத்திரங்கள் முற்றிலுமாக முரணாக இருந்ததால், நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.

789 உடல்கள்
பக்ஸர் பகுதியில் மார்ச் 1ஆம் தேதி முதல் எட்டு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகத் தலைமைச் செயலரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மே 5 முதல் மே 14 வரையிலான காலகட்டத்தில் மட்டும் பக்ஸரில் உள்ள சார்தாம் பகுதியில் உள்ள ஒரு மயானத்தில் மட்டும் 789 உடல்கள் எரிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் டிவிஷன் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.

புதிய அறிக்கை
அரசு துறைகளின் அறிக்கைகளே இப்படி முரணாக இருப்பதால், அதிருப்தி அடைந்த நீதிபதிகள் 2 நாட்களில் புது அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர். இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், டிவிஷன் ஆணையம் சமர்ப்பித்துள்ள 789 என்ற எண்ணிக்கையில் எத்தனை பேர் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.

நீதிபதிகள்
பக்ஸர் நகரின் மொத்த மக்கள் தொகை 17 லட்சமாகும். இதில் ஒரு மயானத்தில் மட்டும் 789 பேர் உடல்கள் எரிக்கப்பட்டிருந்தால் மொத்த உயிரிழப்புகள் என்னவாக இருக்கும்? உயிரிழப்பிற்கான காரணம் உள்ளிட்டவற்றைக் கொண்ட விரிவான புதிய ரிப்போர்ட்டை அரசு இன்னும் இரண்டு நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications