"பேராபத்து.. நாடு உள்நாட்டு போரை நோக்கி செல்கிறது.. காரணம் பாஜக தான்!" விளாசும் லாலு பிரசாத் யாதவ்
பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு யாதவ் பாஜகவை மிகக் கடுமையாகச் சாடும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பீகாரில் இப்போது நிதிஷ் குமார் தலைமையில் ஜேடியூ-பாஜக இடையேயான கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. என்ன தான் கூட்டணி என்றாலும் கூட இரு கட்சிகளுக்கும் இடையே சிறுசிறு பூசல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
பூசல்கள் அதிகரிக்கும் போதெல்லாம் நிதிஷ்குமார் தான் பாஜகவை மட்டும் நம்பி இல்லை என்பதைக் காட்டும் நடவடிக்கையில் இறங்குவார். சமீபத்தில் அவர் எதிர்க்கட்சியின் தேஜஸ்வி யாதவ் நிகழ்ச்சியிலும் கூட கலந்து கொண்டிருந்தார்.

லாலு பிரசாத் யாதவ்
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மத்திய பாரதிய ஜனதா கட்சிக்கு மிகக் கடுமையாகச் சாடி உள்ளார். இந்தியா இப்போது உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், நாட்டில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை சிக்கல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகச் சாடி உள்ள அவர், இதற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் பீகார் முன்னாள் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

உள்நாட்டுப் போர்
சம்பூர்ண கிராந்தி திவாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய லாலு பிரசாத் யாதவ், "பாஜக செயல்படும் விதத்தில் பார்க்கும்போது, நாடு உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நாட்டில் நிலவும் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஊழலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று நான் நாட்டு மக்களை அழைக்கிறேன். இப்போது நாம் ஒற்றுமையாகப் போராட வேண்டும், அப்போது தான் வெற்றி பெற முடியும்" என்றார்.

போராடவேண்டும்
மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அரசுக்கு தனக்கும் தனது கட்சிக்கும் எதிராக எப்படி நடவடிக்கை எடுத்தாலும் சரி, ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றும் லாலு பிரசாத் யாதவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். லாலு பிரசாத் யாதவ் தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்.
Recommended Video

குற்றவாளி
கடந்த பிப்ரவரியில், ராஞ்சியில் உள்ள சிறப்பு மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நீதிமன்றம், ஐந்தாவது கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக டோராண்டா கருவூலத்தில் இருந்து மோசடி செய்ததற்காக லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், டோராண்டா கருவூலத்தில் இருந்து 139.35 கோடி ரூபாய் சட்டவிரோதமாகப் பெற்ற வழக்கில் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் லாலுவுக்கு ஜாமீன் வழங்கியது. உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications