"சம்பவம்" செய்த விவசாயிகள்.. கரண்ட் கம்பத்தில் ஆபீசரா?.. செம டென்ஷனில் அதிகாரிகள்.. என்னாச்சு?
பாட்னா: ஆபீசர் ஒருவரை விவசாயிகள் எல்லாரும் சேர்ந்து கரண்ட் கம்பத்தில் கயிறு போட்டு கட்டி வைத்துவிட்டார்கள்.. என்ன காரணம்?
3 வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் செய்த போராட்டம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதுடன், பல்வேறு வட மாநிலங்களில் நிறைய அரசியல் மாற்றங்களுக்கும் வழிவகுத்தது..
அந்தவகையில், விவசாயிகள் தங்களுக்கான உரிமைகளை, கோரிக்கைகளை துணிவுடன் கேட்டு வருகிறார்கள்.. அந்த வகையில், அரசு அதிகாரிகள் தவறு செய்தாலும் அதையும் தட்டி கேட்டு வருகிறார்கள்.

ஜெகனாபாத்
இதில் பீகார் மாநிலமும் ஒன்று.. இங்கு அரசு அதிகாரிகள் அலட்சியத்துடன் நடந்து கொள்வதாகவும் சமீபகாலமாகவே குற்றச்சாட்டுகள் வெடித்து வருகின்றன.. இப்படித்தான் கடந்த மாதம் ஜெகனாபாத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களை, குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக பணிகளில் ஈடுபடுத்தி உள்ளனர்.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகியிருந்தது..

பிஞ்சுகள்
அதில் அந்த பிஞ்சுகள், மரம் வெட்டுவது, கற்களை வெட்டுவது, நிலத்தை தோண்டுவது போன்ற பணிகளை செய்கிறார்கள்.. இந்த வீடியோவை பார்த்து, பொதுமக்கள் கொந்தளித்துவிட்டனர்.. படிக்கிற பிள்ளைகளை இப்படித்தான் வேலை வாங்குவதா? என்ற கேள்விகள் எழுந்தன.. ஆனால், இந்த விஷயம் தனக்கு ஏற்கனவே தெரியும் என்றும், சம்பந்தப்பட்ட பள்ளி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அந்த மாவட்ட கலெக்டர் அலட்சியமாக பதில் சொல்லி இருந்தார்.

பிளாக் மார்க்கெட்
இப்போது இன்னொரு வீடியோ வெளியாகி உள்ளது.. பீகாரில் உள்ள மோதிஹரியின் அரசு அதிகாரி மீது புகார் எழுந்துள்ளது.. அவர் பெயர் நிதின் குமார்.. விவசாயத் துறையால் நியமிக்கப்பட்ட ஆலோசகர்.. இவர் உரத்தை பதுக்கி வைத்து கறுப்பு சந்தையில் வியாபாரம் செய்கிறாராம்.. இந்த விஷயம் கேள்விப்பட்ட விவசாயிகள், சம்பந்தப்பட்ட ஆபீஸரையே இழுத்து பிடித்து, அங்கிருந்த கம்பத்தில் கட்டி வைத்துவிட்டனர்.. இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது..

ஆபீசர் புலம்பல்
கம்பத்தில் கயிறு போட்டு கட்டப்பட்ட நிலையிலேயே, அந்த ஆபீசுர் போனில் யாருடனோ புலம்புகிறார்.. தனக்கு நேர்ந்த அவலம் குறித்து புலம்புகிறார்.. அரசு அதிகாரி மீது இந்த அளவுக்கு விவசாயிகளுக்கு கோபம் வரக்காரணம், கூடுதல் விலைக்கு உரம் விற்றதுடன், உரத்தை பதுக்கியும் வந்துள்ளார்.. வழக்கத்தைவிட விலை அதிகமாக தந்து உரம் கேட்டாலும், இந்த ஆபீசர் தருவதில்லையாம்.. உர விற்பனையாளர்களுடன் சேர்ந்து கொண்டு, விலையை உயர்த்தவும் செய்கிறாராம்..

மூட்டை
அதாவது ஒரு மூட்டை யூரியா ரூ.265க்கு அரசால் விற்கப்படுகிறது என்றால், இவர், ரூ.500-600க்கு விற்கிறாராம். அதனால்தான் கம்பத்தில் கட்டிவைத்ததாக சொல்கிறார்கள். இதையடுத்து, விவசாயத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் அரசு விலையில் பெற்றுத் தருவதாக உள்ளூர் நிர்வாகம் உறுதியளித்ததுடன், ஆபீசரை விடுவிக்க விவசாயிகளுக்கு அழுத்தமும் தரப்பட்டதாக தெரிகிறது.. இதற்குபிறகுதான், விவசாயிகள் சமாதானம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications