பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்:குடும்பத்துல பங்ஷன்.. நிதிஷுக்கு 'லீவு லெட்டர்’ அனுப்பிய RLD தலைவர்!.
பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் ராஷ்டிரிய லோக் தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரி பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார். குடும்பத்தில் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தம்மால் பாட்னா கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு லீவு லெட்டர் அனுப்பி இருக்கிறார் ஜெயந்த் சவுத்ரி.
பாட்னாவில் இன்று காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்த அண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்கொள்வது தொடர்பாக இன்றைய பாட்னா ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஜேடியூ, ஆர்ஜேடி உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பாட்னாவில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க இயலாது என ராஷ்டிரிய லோக் தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிதிஷ்குமாருக்கு அனுப்பிய கடிதத்தில் தமது குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தவிர்க்க இயலாத இந்த காரணத்தால் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை எனவும் பள்ளிகளில் மாணவர்கள் லீவு லெட்டர் அனுப்புவது போல நிதிஷ்குமாருக்கு ஜெயந்த் சவுத்ரி கடிதம் அனுப்பி இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications